பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 வாழும் வழி அனைத்தையும் கேட்கக் கேட்கச் சிலைவடிவாய் மாறிவிட்ட வாலிபன் கதை முடிந்ததும் உடம்பைச் சிலிர்த்துக்கொண்டான். உணர்ச்சி அவன் வாயைக் கட்டி விட்டது. திடீரென்று எழுந் தான். நான் போய் விட்டு மாலையில் வருகிறேன் ' என்று நடந்தான். நெட்டுயிர்த்த பஞ்சநதம் தட்டுத்தடுமாறி எழுந்து உள்ளே போனன். பல் விளக்கிக் கூழ் குடித்தான். தந்தையும் மகளும் அன்றை நிகழ்ச்சி பற்றி பேசிக்கொள்ளலானர்கள். பொழுது சென்றுகொண்டிருந்தது. மாலை வந்தது. குடிசைவாயிலில் சைகிள் மணி கிணுகினுத் தது. காலையில் வந்து சென்ற வாலிபன்தான் வந்தான். அவன் கையில் ஒரு பொட்டணம்; அதில் கதர் ஆடைகள், சைகிளின் பின்னே கட்டியிருந்த சர்க்காவையும் பஞ்சுப் பொட்டணத்தை யும் இறக்கித் திண்ணையிலே வைத்தவன் நூல் நூற்கத் தொடங்கி ன்ை. ' உங்கள் மரகதம் இதைச் செய்யட்டும் ; உடைப் பஞ்சம் மட்டுமன்று ; உணவுப்பஞ்சமும் பறந்தே போய் விடும் ' என் ருன். அவன் கொணர்ந்த ஆடையை உடுத்த மரகதம் அவனை வணங்கிச் சர்க்காவைப் பக்தியுடன் பெற்றுக்கொண்டாள். காந்தி மகான் ராட்டை சுற்றும் படத்தைக் குடிசையிலே மாட்டிவிட்டு விடைபெற்றுச் சென்ருன் வாலிபன். — [...] - [...] --