பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 கிராமராஜ்ஜியம் தெரியவில்லை. ஒரு வேளை இளமை நாட்களில் வாழ்ந்து பழகிய ஊருக்குப் போவது காரணமாக இருக்கலாம். இத்தனே ஆண்டு களாகத் திருச்சிக்கு எத்தனையோ முறை வந்திருந்தாலும் கூட மூன்று கல் தொலைவிலுள்ள உய்யக் கொண்டான் திருமலைக்கு நான் அதன் பின்னர் வந்தவன் அல்லன். இன்று தான் போகி றேன். கால் நடையாக மூன்று மைல்கள் நடந்து வந்து திருச்சிராப் பள்ளியில் படித்த காலம். அதற்கும் முன்னர் சோமரசம் பேட்டையிலிருந்து இரண்டு மைல்கள் வந்து உய்யக் கொண் டான் திருமயிலையில் படித்த பருவம்; எல்லாம் சேர்ந்து கொண்டு மனதைக் கிசு கிசு மூட்டிக் கொண்டிருந்தது. நெஞ்சம் கிளு கிளுத்தது. ஆமாம்! நான் ஆருவது படிக்கும் போது தான் எங்கள் குடும்பம் அழகிய கிராமமான சோமரசம் பேட்டைக்குக் குடி பெயர்ந்தது. அப்போது அவ்வூரின் எலிமெண்டரி ஸ்கூலில் ஐந்தாவது வரையில் தான் இருந்தது. ஆருவது படிக்க உய்யக் கொண்டான் திருமலைக்குத் தான் போக வேண்டும். அங்கே ஒரு ஹையர் எலிமெண்டரி ஸ்கூல் இருந்தது, எட்டாவது வகுப்பு வரையில் அங்கே உண்டு. நான் ஆருவது வகுப்பில் சேர்க்கப் பட்டேன். தினமும் நடந்து வந்து படிப்பேன். அப்போது அந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியராக இருந் தவர் ஒரு நல்ல மனிதர். இலட்சுமணன் என்பவர். முன்னேற் றக் கருத்துக்களைக் கொண்ட ஒரு சிறந்த ஆசிரியர். இன்று நான் அரசியலில் ஒரு வல்ல எழுத்தாளனுகவும், பேச்சாளனுகவும் ஆவதற்கு அவரே அஸ்திவாரம் இட்டார். மற்றும் கலை, கல்வி, இசை ஆகியவற்றிற்கும் என்னை ஊக்கியவர் அவரே. பள்ளிக்கூட நாடகங்களில் என்னை நடிக்க வைத்தார். தக்கிளி பிடித்து நூற்க வைத்தார். ராட்டையில் நூல் நூற்க வைத்தார். அந்த நாட்களில் ஆங்கில அரசு இருந்ததால் இவை பள்ளிப் பாடத் திட்டத்தில் இல்லாவிட்டாலும் கூட அவர் மவுனமாக இவற்றை மாணவர் மனத்தில் பதிய வைத்தார். பாடங்களின் இடையிடையே கதைகளைப் போல இந்திய நாட்டின் பெருமைகள் பற்றிப் போதித்தார்; அதன் பயனகத் தான் நான் அரசியலில் பங்கு கொண்டேன். அந்தச் சமயத்தில் ஒரு தடவை மகாத்மா காந்தியவர்கள் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார்கள். பிஹார் பூகம்பத் துக்கு உதவி செய்ய நிதி கேட்டு வந்திருந்ததாக ஞாபகம், திருச்சிக்கும் வந்திருந்தார்கள். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு கதர் மாலை அணிவித்து ஒரு சிறு தொகை அளிக்கவும் எங்கள்