பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹி 481 தலைமையாசிரியர் ஏற்பாடு செய்திருந்தார். அப்படி மாலை அணி வித்து தொகை அளிக்க ஒரு சிறுமியை சித்தம் செய்திருந்தார். அவள் பெயர் மறந்து விட்டது. ரோஜா ரோஜா என்று அழைப் போம். என்னுடன் கூட சோமரசம் பேட்டையிலிருந்து உடன் நடந்து வருபவள் தான். என்ன காரணத்தாலோ அன்று அந்தச் சிறுமி காந்திஜிக்கு மாலை அணிவிக்கவில்லை. அதற்குப் பதில் நான் மாலை அணிவித் தேன். சிறு தொகை கொண்ட முடிச்சை அண்ணல் கையில் என் பிஞ்சுக் கைகளால் கொடுத்தேன். அந்த சந்திப்பின் காரணமோ என்னமோ நானும் அரசியலில் பங்கு கொண்டு அதிகமாக ஈடுபட்டேன். தீவிரமாக என்னை நானே முன்னேற் றிக் கொண்டேன். 1942ல் சிறை சென்றேன் தேர்தலில் நின்றேன். வென்றேன். பதவி வகித்தேன். என்னென்னவோ, அதெல்லாம் இப்போது எதற்கு ? இன்னம் இன்றும் என் தேசிய வாழ்வு'தொடர்கிறது. கொடி ஏற்றப் போகிறேன். இளமை நினைவுகள் வந்து விட்டால் எத்தனை வயதிலாக இருந்தாலும் தன்னுள் ஒரு துடிப்பு வந்து விடுகிறது. இன்று நான் இளைஞகை என்னை எண்ணிக் கொண்டேன். அப்படி யில்லாவிட்டால் ஓடி வந்து கொண்டிருக்கும் எட்டாம் நெம்பர் பஸ்வில் முதல் ஆளாகத் தொத்தி ஏறிக் கொண்டிருப்பேன ? யாரோ கூடச் சொன்னர்கள் : கெளவனைப் பாருய்யா ! எளம் பிள்ளை மாதிரி பாஞ்சு ஏர்ரான் ' என்று. நான் என்ன செய்ய? சலவை செய்த கதராடை போல என் நிலை மாறிவிட்டாலும் சோமரசம் பேட்டைக்குப் போகப் போகிறேன் என்ற எண்ணம் என்னை இளைஞன் ஆக்கிவிட்டிருக்கிறது. பஸ்ஸில் முதல் வீட்டில் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். பஸ் புறப் பட்டது. என் சிறு கால் பட்டுத் தேய்ந்த அதே பாதை. தென்னுரர் கேட், புத்துார் வண்டி ஸ்டாண்டு. இருபுறமும் தென்னை வளர்ந்த வளைந்த சாலை, இடையிடையே கொடிக்காவிகள், வாய்க்கால் கள், கடைசியில் உய்யக் கொண்டான் ஆறு. இதோ மலை கூடத் தெரிகிறது. மலையைத் தாண்டித்தான் நான் பயின்ற பள்ளி, இப்போது போர்டு ஹைஸ் கூல் ஆகிவிட்டிருக்கும். ஒரு வேளை அதே தலைமையாசிரியர், இலட்சுமணன் இன்னும் பணி ஆ...ம்...று... சேச் சே, இது காறும் அவர் ஒய்வு பெற்றிருக்க லாம். எதற்கும் இறங்கிப் பார்க்க வேண்டும் என்ற உந்தல்... சோமரசம் பேட்டைக்கு டிக்கெட் வாங்கினலும் உய்யக் கொண் டான் திருமலையில் இறங்கி விட்டேன். ஊரே மாறி விட்டிருந் தது. என் நண்பர்களின் பெயரை நினைவு படுத்திக் கொண் டேன்; மகுளாளி மகன் கணேசன், மளிகைக் கடைக்காரர் ат-31