பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 கிராமராஜ்ஜியம் மகன் திருமுடி, ரோஜா, ராமு... அப்பா... என் நண்பர்கள் இப் போது எங்கெங்கே இருக்கிருர்களோ ? சுற்று முற்றும் பார்த்தேன்... எதுவும் தெரிந்த முகம் இல்லை ... விசாரித்துப் பார்த்தேன். பழைமை பற்றி நான் நினைத்த அளவு வேறு எவரும் நினைத்ததாகத் தெரியவில்லை. கடைசியில் கணேசனைக் கண்டுபிடித்தேன். அப்பா ஆள் எப்படி மாறிவிட் டான் என்னை விடக் கிழவனுகி விட்டிருந்தான். என்னைப்பற்றி நினைவு படுத்திப் படுத்திக் கொண்டு பட்டும் படாமலும் பேசி ஞன், எனக்குப் பிடிக்கவில்லை. அடுத்த பஸ்ஸில் சோமரசம் பேட்டைக்குப் புறப்பட்டு விட்டேன். பஸ்ஸில் ஒருவர் என்னை இனம் கண்டு கொண்டு விட்டார். ' என்னங்க. நான் கோட்டையிலே ஒங்களைத் தேடிவிட்டு வர்ரேன். நீங்களான ஒங்க பழைய ஊருலே வந்து வண்டி ஏர்ரீங்க... எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. - 'ஏனய்யா. நான் இந்த ஊர்க்காரன் என்று எப்படித் தெரி யும் 2. ' ஏன் ! அம்மாதான் சொன்னங்க...!" 'அம்மாவா ! அது யாருப்பா...? என்னங்க இப்படிச் சொல்றீங்க. இன்னிக்கி அவுங்க ஏற்பாட்டுலேதானே விழா நடக்குது... அவுங்கதான் ஒங்களைக் குறிப்பிட்டுக் கூட்டியாரச் சொன்னங்க...!" ! அது யாரைய்யா... என்னைத் தெரிஞ்சம்மா... ?” அதுதானுங்க ரோஸம்மா......!’ எனக்கு ஒன்றும் புரியவில்லை. ரோஸ் அம்மா. ரோஜா தான...சே. இத்தனை ஆண்டுகளில் ரோஜா எந்தப் பேரனை எடுத்துக்கொண்டு எந்த ஊரில் போய்க் கொண்டிருக்கிருளோ ! இது யாராவது கிறிஸ்தவப் பெண்ணுக இருக்கும்... என்று எண்ணினேன். என் சிந்தனையை அந்த ஆள் கலைக்க வில்லை. பஸ் ஓடிக்கொண்டிருந்தது. -- ஒரு வழியாக சோமரசம் பேட்டைக்கு வந்து சேர்ந்தோம். உடன் வந்தவர் என்னை மரியாதையாக அழைத்துச் சென்ருர். விழா நடக்கவிருந்த வீட்டின் வாயிலில் கொண்டு சேர்த்தார். ஊரே மாறிவிட்டிருந்தது. கல்வித் துறைக்குப் போகும் திருப் பத்தில் ஒரு சிறு பர்ணசாலை போன்ற வீட்டில் தான் கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, வாசலில் தோரணம். தேசியக் கொடி அத்துடன் மாதர் நல மன்றம், காந்தி நூற்பு