பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹி 483 ஆலே போன்ற பெயர்கள் கொண்ட பலகைகள் புதிதாக மாட்டி வைக்கப்பட்டிருந்தன. என்னை ஒரு முதிர்ந்த அம்மையார் வர வேற்ருர்கள். வாருங்கள் குரு. வாருங்கள்...!” எனக்கு ஒன்றும் புரியவில்லை. இத்தனை உரிமையுடன் என்னை அழைப்பவர், என் தாய், என் சகோதரி மற்றும் ஒருத்தி. ஆம் ! ரோஜா...

  • யாரது ரோஜாவா...?' என்றேன்.

ஆமாம் அய்யா ! உங்க ரோஜாதான் ரோஸ்ம்மாவாக இங்கு நிற்கிறேன்.' பெயர் மொழி பெயர்ப்பா.. இல்லை. மதம்...!" 'இரண்டும் இல்லை... நான் எந்த மதமும் இல்லை காந்தி மதம்.. ராசம்மா என்ற இந்துப் பெண்ணுகப் பிறந்து. ரோஜா வாகப் படித்து இன்று ரோஸம்மா...!" " நான் நினைத்தேன்...!' என்று விட்டேன்... " எப்படி...' ரோஜா கேள்விக் குறியாகி நின்ருள். அவள் கண்களில் அதே பழைய குறுகுறுப்பு... இல்லை இந்த ஊருக்கு வருகிறேன் என்று நினைத்தவுடன் ரோஜாவின் மணம் தான் முதன் முதல் வந்தது. பின்னர் இளமை நினைவுகள்...' இதற்குள் விழா நிர்வாகிகள் விழாவைத் தொடங்கி விட்டார்கள். என்னை மேடைக்கு அழைத்தார்கள். நான் தலைமைவகித்துக் கொடி ஏற்றினேன். வரவேற்பு உரையாக ரோஸம்மா பேசினர்கள். அன்பர்களே ! என்னை உங்களுக்குத் தெரியும், ஊரில் ஒதுங்கி நிற்கும் ரோஸம்மா. தலைமை வகிக்கும் ரீமான் குரு என்னுடன் இளமை நாட்களில் படித்தவர். நாங்கள் இவ்வூரிலி ருந்து உய்யக் கொண்டான் திருமலைக்குப் படிக்கப் போவோம் நடந்து தான். அன்று பஸ்கிடையாது. அங்கே அன்று ஒரு தலைமை ஆசிரியர் இருந்தார்கள். லட்சுமணன் என்று பெயர் ஒரு சமயம் மகாத்மா காந்தி அண்ணல் திருச்சிக்கு வர இருந்தார்கள். அவருக்கு கதர் மாலை அணிவிக்கத் தலைமை ஆசிரியர் என்னே ஏற்பாடு செய்திருந்தார்கள். நானும் பயந்து கொண்டே ஒப்புக் கொண்டேன். இருந்தாலும் அண்ணலை நேரில் காணும் பேறு கிடைக்குமே என்ற பேராசையில் ஒப்புக் கொண்டேன். - அந்த நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவு எனக்கு ஒரு கனவு வந்தது; மகாத்மா காந்தி வருகிருர் நான் நடுங்கும் கைகளில்