பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சி. சு. செல்லப்பா ஹாம் யாராவது சீக்கிரம் ஆரம்பியுங்கள் தலைவன் அவசரப்படுத்தினன். ஒரு குரலும் பதில் கொடுக்கவில்லை. என்ன, ஜெயசிங்கை விட்டால் பாட ஆளே கிடையாதா... குரலைப் பற்றி கவலையில்லை...ஹாம் யாராவது?...கருப்பையா, ராமநாதன், நவநீதன்...ஃபைலுக்கு நாழி ஆகிறது. என்று ஒரு வரும் பாட முன்வராததைக் கண்டு தலைவன் உரத்துச்சொன் இவ்வளவுக்கும் பிறகுதான் இரட்டையாக வகிர்ந்து நின்று கொண்டிருந்த அந்த அணிவகுப்பின் ஒரு கோடியிலிருந்து ஒரு கட்டையான குரல் பிரார்த்தனையை ஆரம்பித்தது. பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்...... எல்லோ ரும் கோஷ்டியாக அதை எதிரொலித்தார்கள். பிரார்த்தனை ஞாப கத்திலே ஜெயசிங்கைப் பற்றிய நினைவு அழிந்துவிட்டது. ஆனல், தன்னைப் பற்றிய சம்பாஷணை ஜெயசிங்கின் காது களில் விழுந்தது. அப்போதும் அவன் அசையவில்லை. தரை யையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். ஜெயசிங்கின் தாய் இறந்துவிட்டாள். அவள் உடல் வெந்து சாம்பலான இடத்திற்கும், அவர்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த இடத்திற்கும் நடுவே ஒரு மூன்று நாள் பிரயாணம் குறுக்கிட்டு நின்றது. கிழத் தாய்க்கு ஜெயசிங் ஒரே பிள்ளை. அவன் கையால் கொள்ளி வைக்கும் ஒரு பாக்கியத்தை அந்த வைரம் பாய்ந்த தேகம் கொடுத்து வைக்கவில்லை. கண்கள் நிலைகுத்திப் போகுமுன் தாயின் கடைசிப் பார்வையை-அவள் அவனிடம் விடைபெற்றுக் கொள்வதை அவன் பார்க்க முடியவில்லை. அவள் கடைசி மூச்சு ஒடுங்குவதை, தான் பெற்ற குழந்தையின் மடியில் தலையை வைத்துக்கொண்டு நிம்மதியாக அந்த ஆத்மா வெளியேறுவதை உணர அந்த பாப ஆத்மாவுக்குக் கிடைக்கவில்லை. - பிராப்தம்-என்று சொல்வார்களே அதுதான் எவ்வளவு பெரிய உண்மை. . இல்லாது போனல் எழுபத்தைந்து வருஷங்களாக ஒடிக் கொண்டிருந்த சுவாசம் இன்னும் சில தினங்களுக்கு நீண் டிருக்காதா? நாளை கழித்து மறுநாள் ஜெயசிங் விடுதலையாக இருந்தான். ஜெயசிங் உள்பட அந்த பிரார்த்தினையில் கலந்து கொண் டிருந்தவர்கள் எல்லோரும் அந்தச் சிறை முகாமில் நாட்களை