பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. பார்த்திபன் 50 அண்ணலே உன் வழி " யோன் . அப்பாலே போய்யா... மேலே வந்து உரசிக் கினு நிக்கிறே!... ' - எரிச்சல். சே !... ஏ. சே !... - அருவருப்பு அட சீ கர்மம்... கர்மம் ! - அலுப்பு. இதோ பாரய்யா!... நாங்கள் எல்லாம் போகும்வரை அதோ அங்கே போய் உட்காந்திரு ... எழுந்திருக்கவே எழுந்திருக் காதே !... எல்லோரும் போனபிறகு போய்க் காட்டிக்கொள்... ஏதேனும் தேறக்கூடிய உடம்பாக இருந்தால் சரி... உடம்பைத் தின்னும் இந்த வியாதிக்கு... - அறிவுறை. இத்தனைக்கும் ஆளான அந்த உருவம் துணிப்போர்வைக் குள்ளிருந்து முனகியது. சிறிது கெஞ்சிப் பார்த்துவிட்டு, பய னற்றுப் போகவே ஏமாற்றத்தோடு தொலைதுாரத்தில் போய் அமர்ந்து கொண்டது. அதற்குப் பின்னர்தான் அந்தக் கூட்டத் தில் அமைதி நிலவியது. ஒவ்வொருவராக உள்ளே செல்வதும், திரும்பி வருவது மாகக் கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. நேரம் சூரியனின் ஒளியோடு ஏறிக்கொண்டேயிருந்தது. ' ம்!.. இந்த ஈக்களுக்கு எப்படித்தான் நான் இருக்கும் இடம் தெரியுதோ !... துணியை இழுத்துப் போர்த்திக் கொண் டாலும் கூட மேய வந்து விடுகின்றன. இவைகளின் தொல்லை களிலிருந்து விடுபடுவதே பெரும்பாடாகி விடுகிறது !... "-துணி மூட்டத்திற்குள்ளிருந்து நாகலிங்கம் முனகினன். வெயில் ஏற ஏற அவன் உடல் வாதையும் அதிகரித்துக்கொண்டே போயிற்று: