பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 அண்ணலே உன் வழி அவனுடைய இதயம் அவனைக் குத்திக் காட்டிச் சிரித்தது: 'ஏய் !. நாகலிங்கம்! அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லுமடா!... தெரியுமா? ஒன்றும் அறியாத அந்த சங்கரமூர்த்தியை, நீ செய்த கொலைக்காகக் குற்றவாளியாக்கி... தண்டனை வாங்கிக் கொடுத்தாயே... அதுதான் அநுபவிக் கிருய் !...” இதயத்தின் ஒலத்தை அவனல் பொறுக்க முடியவில்லை. உள்ளம் குமுறிக் குமுறிக் குன்றியது. அவனுடைய கண்கள் நீரால் குளமாயின. உடல் நடுங்கியது. இழுத்து மூடிப் போர்த்துக்கொண்டு கண்களையும் மூடிக் கொண்டான் நாகலிங்கம். அவன் மனக்கண்கள் விரிந்து கொண்டன. 采 * * எங்கே திரும்பினாலும் மனிதத் தலைகள் கசமுச வென்ற பேச்சு. அனுதாபம், ஆச்சரியம், ஆத்திரம் முதலிய நவரசக் கலவை. கண்டிப்பு, பக்கபலமான வார்த்தைகள், கோஷங்கள் முதலிய பாலிடிக்ஸ். ஆளுல் எதையும் பொருட்படுத்தாமல் போலிசார் கடமையை நிறைவேற்றுவதில் முனைந்திருந்தனர். சங்ரமூர்த்தி போலீஸாரின் பாதுகாப்போடு வேனு" க்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடைய தலை குனிந்திருக்கவில்லை, நிமிர்ந்திருந்தது.

  • * கண்கள் நாணத்தோடு இமையினுள் ஒளிந்துகொள்ளவில்லை. ஆத்திரத்தோடு கனத்து நிலைகுத்திக் கிடந்தன.

கால்கள் சோர்ந்து மெல்லடி பெயர்க்கவில்லை, ராணுவத் தினனைப்போல் வீரநடை பயின்று கொண்டிருந்தது. என்னதான் தன் இதயத்தின் உணர்ச்சிக் குவியலை அவர் அடக்கிக் கொண்டாலும்கூட, கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டிருந்த ஆனந்தனல் தாங்கமுடியவில்லை. ஒடிச் சென்று தந்தையின் காலடியில் வீழ்ந்தான்; உடல் குலுங்கக் குமுறிக் குமுறிக் கரைந்தான்; அவர் கால்களைக் கண்ணிரால் கழுவினன். சங்கரமூர்த்தி சிரித்தார். ஒஹோ' என்று வெறிபிடித் தாற்போல் சிரித்தார். -