பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

套9拿 அண்ணலே உன் வழி உலகமே வெறுத்து ஒதுக்கும் நம்மிடமும் ஒருவர் ஆதர வாகப் பேசுகிருரா ? நாகலிங்கம் தள்ளாடி எழமுயன்ருன். அவன் தடுமாறிக் கீழே விழ எத்தனிக்கவே, அந்த வாலிபன் குனிந்து அவனைப் பற்றிக் கொண்டான். நாகலிங்கம் குன்றிப்போனன். பக்கத்தில் வந்தாலே எட்டி ஒடத்துடிக்கின்ற இந்தச் சமு தாயத்தில் நம்மைத் தொட்டுத் தூக்கவும் ஒருவர் இருக்கிருரா? நாகலிங்கத்தை அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்த அந்த வாலிபன் அவன் மேற்போர்வையை நீக்கினன். அவனு டைய முகத்தைப் பார்த்ததும் அவ்வாலிபன் முகத்தில் திகைப் பின் வியப்புகள் ! " ...இவ.ன்...கொலை...கார...நா.க.லிங்கம்...அல்... லவா ? ... நாம் பழிவாங்க வேண்டிய , கயவனல்லவா!... உள்ளத்தில் தோன்றிய உணர்வினது பொழிவால் ஆனந்த னின் உடல் சூடேறியது. "பழிக்குப் பழி ரத்தத்திற்கு ரத்தம் 1-ஆனந்தனின் மனக்குரல் முனகியது. நாகலிங்கம் பேசிக் கொண்டிருந்தான் : "... ஐயா ! ... ஊரே உங்களைப் பற்றிப் பேசிக் கொள்கிறது. உலகத்தை உய்விக்க வந்த ஆண்டவன் என்று புகழ்கிறது !... இது வரை யாரிடமும் இல்லாத மூலிகைகளைக் கொண்டு தீராத பெரும் வியாதிகளை எல்லாம் குணப் படுத்துகிறீர்களாம்.... அதஞல் தான் உங்கள் சந்நிதியைத் தேடி ஓடி வந்தேன் ஆண்டவனே ! ... ' -என்று கூறியபடி ஆனந்தனின் காலடியில் விழுந்தான். ஆனந்தனின் உள்ளம் என்ன செய்வது என்ற முடிவிற்கு வர முடியாமல் தடு மாறித் தவித்தது: நீங்களும் இன்று போய்விட்டு நாளை வாருங்கள். மருந்து தருகிறேன் !... ' -என்ருன் நாகலிங்கம் உள்ளம் நிறைந்தாற் போன்ற உணர்வுடன் வாயிலை நோக்கி நடந்தான். அவன் சென்ற பின் ஆனந்தன் தந்தையின் படத்தருகில் சென்று வணங்கினன். "அப்பா!... அன்று எனக்குப் பயந்து ஓடியவன், இதோ. இன்று என் காலடியில் சரணடைய ஒடி வந்திருக்கிருன், அவனை என்ன செய்வதென்று தெரியவில்லை. பழிக்குப் பழி என்று அவனத் தேடி அலைந்து கொண்டிருந்தேன் இத்தனை நாள்.