பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. பார்த்திபன் 491 ஆனால் இன்று என் முன்னே, இதோ இருக்கிறேன் என்று அவன் வந்து நிற்கும் போது என் கரங்கள் கட்டப் பட்டுள்ளதைப் போல் உணர்கிறேன் !... தெய்வமாகி விட்ட நீங்கள் தான் வழி காட்ட வேண்டும். ' 并 蔷 普 $4 鼎 o - * & ஐயா!' -வாயிற்புறத்திலிருந்து குரல் எழுந்தது. உள்ளே வாருங்கள் !... -ஆனந்தனின் பதில், ஒருவர் உள்ளே நுழைந்தார். தூயக் கதராடை, தெளிவான முகம். அமைதியான நடை: ' என்ன வேண்டும் ? ' ' நண்பரே !... என் குழந்தைக்கு இது நாள் வரை குண மாகாத நோயை நீங்கள் தீர்த்து விட்டீர்கள்; அதற்குக் காணிக்கை செலுத்த வந்துள்ளேன். ' ஆனந்தன் சிரித்தான். ' நான் எதுவும் பெற்றுக் கொள்வ தில்லை என்று உங்களுக்குத் தெரியாதா ? ' " நான் பொருள் ஒன்றும் கொண்டு வரவில்லை ஐயா ! எந்தப் பொருளும் உண்மையான அன்பைக் குறிக்காது என்று நினைப் பவன் நான். ஆளுல் நான் இப்போது கொண்டு வந்திருக்கும் காணிக்கையை நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்,' என்றபடியே அந்த மனிதர் தம் கையிலிருந்த பொருளை ஆனந்த னின் முன்னர் வைத்தார். ஒரு கதர்த் துண்டு ! காந்தியைப் பற்றிய சில புத்தகங்கள் ! 'இந்தத் துண்டு நானே நூற்று நெய்தது ஐயா! - அவர் குரலில் பெருமையின் இழைகள். இந்தக் கதர் தான், உண்மையின், அன்பின், பக்தியின் சின்னம் என்று நான் கருதுகிறேன். நன்றி ஐயா, நான் வருகி றேன் !... ' -அந்தத் தொண்டர் விடை பெற்று நடந்தார்: ஆனந்தன் கதருடையையும், புத்தகங்களையும் எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டான்: - அந்தப் புத்தகத்தில் ஒன்றை எடுத்துப் படிக்க ஆரம்பித் தான். -