பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 அண்ணலே உன் வழி , - தென்குப்பிரிக்காவில் ஒரு நாள். இந்தியருக்கு அனுமதிச் சீட்டு அளிக்க வேண்டும் என்று காந்திஜியின் யோசனை பேரில் தென்னப்பிரிக்க சர்க்கார் தீர்மானித்தது. சீட்டு இல்லாதோர் தண்டிக்கப் படுவார்கள் என்றும் அரசாங்கம் அறிவித்தது. காந்திஜி இவைகளுக்கு ஒப்புக் கொண்டார். சிலருக்கு இந்த ஒப்பந்தம் பிடிக்கவில்லை, அவர் களுள் மீர் ஆலம் என்ற பட்டாணியனும் ஒருவன். ஒரு பொதுக் கூட்டத்தில் காந்திஜியை நோக்கி மீர் ஆலம், * இந்த அனுமதிச் சீட்டு சமாசாரம் எனக்குப் பிடிக்கவில்லை !... ' என்று கத்தினன். காந்திஜி சாந்தமாக, பிடிக்காதவர்கள் வாங்க வேண் டாம். நான் வாங்கப் போகிறேன்.... ' என்ருர்: " நான் அடிப்பேன் ... ' என்று வெறியோடு கூவினன் மீர் ஆலம்; காந்திபாபு சிரித்தார். ஆனால் ... அனுமதிச் சீட்டு வாங்க காந்தியடிகள் சென்ற போது மீர் ஆலம் ஒரு குழுவோடு வந்து அவரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, அவர் இறந்து விட்டார்’ என்று அப்படியே விட்டுச் சென்ருன்) நினைவு வந்ததும் பாபுவின் வாயிலிருந்து வந்த முதல் சொற் கள்: ' என்னைத் தாக்கியவரை தண்டிக்கக் கூடாது நான் அவர் களை மன்னிக்கிறேன்....' என்பனவே. ஆனந்தனின் உடல் புல்லரித்தது. கண்களில் நீர் முத்தெடுத் தது. ஒன்ரு இரண்டா? அந்தப் புத்தகம் முழுவதிலும் இதே போன்ற நிகழ்ச்சிகள். அத்தனையும் அண்ணலின் சத்தியமான மன்னிப்புக்களைக் கொண்டவை அவற்றைப் படிக்கப் படிக்க ஆனந்தனின் உள்ளம் தெளிந்து கொண்டே வந்தது. மற்ருெரு பக்கத்தில்...... மாலை 5 மணி. பிரார்த்தனை நேரம் வரவே காந்திஜி பிரார்த் தனக்குப் புறப்பட்டார். மக்கள் வந்து குழுமியிருந்தனர். காந்தி மகான் பிரார்த்தனை ஸ்தானத்தை அடைந்த உடனே, எவனே ஒரு வாலிபன் பாய்ந்து வந்து அவரது உடலில் துப்பாக்கியால் சுட்டான். உடல் தரையில் சாய்ந்தது; ரத்தப் பெருக்கெடுத்தது: இருபது நிமிடங்களுக் கெல்லாம் அத்தெய்வத்தின் இகலோக வாழ்வு முடிந்துவிட்டது. இறந்து கிடந்த மகானின் முகத்தில் தயையும், மன்னிப்பும் - அதாவது குற்றவாளியினிடத்தில் மன்னிப்பும் - காணப்பட்டதாம்......!"