பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. பார்த்திபன் 493 அதற்குமேல் ஆனந்தனல் படிக்க முடியவில்லை. புத்தகத்தை மூடினன். அப்புத்தகத்தின் மேலிருந்த நிர்மலமான காந்திஜியின் முகம் அவனைப் பார்த்துச் சிரித்தது. அன்பனே குற்றம் செய்வோரைத் தண்டிக்காதே ! மாருக அவர்களிடம் அன்புபூண்டொழுகு. அன்பினாலும் பாசத்திலுைம் அவர்களைக் கட்டு. குற்றவாளிகள் குற்றம் செய்வதற்கென்றே பிறந்தவர்கள் என எண்ணுதே ... அவர்களும் திருந்த ஒரு வாய்ப்புக்கொடு, ஹரே ராம்! ஹரே ராம் !...” ஆனந்தன் கண்களைக் மூடிக்கொண்டான். அவன் இமையி லிருந்து இரண்டு சொட்டுக் கண்ணிர்த் துளிகள் கீழே உதிர்ந்தன. அவை அவன் இதயத்திலிருந்த பழி, பழி' என்ற அழுக்கையும் கழுவிக் கொண்டு விழுந்தன: அண்ணலே ! உனது ஆணை 1. தவறு செய்பவனை மன்னிப் பதே கடவுள் தொண்டு !...அவர்கட்கு நன்மை செய்வதே தகுந்த தண்டனை '- என்று கூறிக்கொண்டான். நாகலிங்கத்தின் கொடிய தொழுநோயைத் தீர்க்க அமிருத சஞ்சீவினி ' எனும் அரிய மருந்தைத் தயாரிப்பதில் முழு மூச்சாய் ஈடுபடலானன் ஆனந்தன்.