பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும் மக்கள் மொழியாகவும் மக்கள் இலக்கியமாகவும் மறுமலர்ச்சி பெற்றதற்கு அடிப்படைக் காரணங்கள் இரண்டு. ஒன்று, தேசீயப் போராட்டத்தால் மக்களிடம் ஏற்பட்ட விழிப்பு ; மற்ருென்று காந்தியம் மக்கள் இயக்கமாகப் பரவியதால் ஏற்பட்ட புத்தெழுச்சி. தேசீயப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டவர்கள், தீவிரமான மொழிப் பற்றும் கொண்டவர்கள் என்பதையும், நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் ஒருங்கிணைந்தே இந்த நூற்ருண்டின் முற்பகுதியில் வளர்ந்தன என்பதையும் இப்போது சிலர் மறந்திருக்கலாம். ஆனல் மறந்து விடக் கூடாத, மறைக்க முடியாத, வரலாற்று உண்மை அது தான்! தேசீயம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் ஒர் ஆராய்ச்சி நூல் தக்கவர்களால் எழுதப் பெறு மாயின், அப்போது பல உண்மைகள் வெளிவரக் காணலாம். உரை நடையை உயிர்த்துடிப்பும், கருத்தாழமும், எளிமையும், இனிமையும், உடையதாகச் செய்து, லட்சோபலட்சம் தமிழ் இளைஞர் உள்ளத்தில் நாட்டுப் பற்றையும் மொழிப்பற்றையும் ஒன்ருக ஊட்டி வளர்த்தவர் திரு. வி. கலியாணசுந்தர முதலியார். யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனி தாவதெங்கும் காணுேம்' என்று முழங்கியவர் நம் தேசிய மகாகவி பாரதியார். வ. உ. சிதம்பரம்பிள்ளை யின் நாட்டுப்பற்று, அவரது மொழிப்பற்றிலிருந்து பிரிக்க, முடியாதது என்பது அவர்தம் நூல்களைப் தாருக்கு விளங்கும். அவ்வாறே ஆயுதப்புரட்சி ாயிலாகவே நாட்டு விடுதலை பெற முடியும் தம்பி உழைத்த வ. வே. சு. ஐயரின் தமிழ்ப் பும் நாடறியும். திருக்குறளையும் கம்பரையும்