பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. சு. செல்லப்பா 33 கழித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதுகாப்புச் சட்டக் கைதிகள். தேசத்தின் பாதுகாப்புக்கு இடைஞ்சல் செய்தவர்கள், செய்துவிடக் கூடியவர்கள் என்பதற்காக அவர்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார்கள். அந்தச் சிறை நிரந்தரமாக ஏற்பட்ட, உயர்ந்த சுவர்கள் எழுப்பிய ஜில்லா ஜெயில் அல்ல. ஒரு விசேஷ சிறைமுகாம்; வெளியே இருந்து வரும் வேகத்தை துண்டு துண்டாக சமாளிக்க முடியாமல் மாகாணம் முழுவதும் உள்ள எல்லோரையும் சேர்த்து திரட்டி வைத்திருந்தது. ஜன சஞ்சாரமே இல்லாத ஒரு பொட்டலில் சிறு சிறு மலைக் குன்றுகளின் சார்பின் அடிவாரத் திலே விசும்பி நிற்கும் பெரிய கட்டிடங்களைச் சூழ்ந்து வேலி போட்டிருந்தது. - இந்தக் கட்டிடங்கள் இன்று நேற்று கட்டப்பட்டனவாக தோன்றவில்லை. பழமை வாசனை கலந்து வீசியது, அவைகளின் தோற்றம். கேவலம் கைதிகளை அடைப்பதற்காக யாரும் அந்தக் காலத்தில் இவ்வளவு சிரத்தை எடுத்து நிர்மாணித்திருக்க மாட்டார்கள். - * கைதியாக முதன் முதலில் கிருகப்பிரவேசம் செய்தவர்கள் இப்பொழுது பிரார்த்தனை செய்துகொண்டிருப்பவர்கள் அல்ல. அந்தப் பெருமை அவர்களுக்குக் கிடையாது. பத்து வருஷங்களுக்கு முன்னல் தங்கள் உரிமைக்குப் போராடினவர்கள் என்ற குற்றத்திற்காக இவர்களவர்களே அதில் நாட்களைக் கழித்துவிட்டுப் போயிருக்கிருர்கள். அதற்கு முன்னல் அந்த இடத்தில் மாப்பிள்ளைக் கைதிகள் பல வருஷங்களைக் கடத்திவிட்டிருந்ததாகச் சொல்லிக்கொண் டார்கள். இன்னும் பல வருஷங்களுக்கு முன்பு, மஹா யுத்தத்தின் போது துருக்கியக் கைதிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தார்கள். - இதற்குமேல் அதன் சரித்திரப் பூர்வீகம் தெரியவில்லை. கைதிகள் பரம்பரை-இந்தப் பெருமையை அந்த பிரமாண்ட மான கட்டிடங்கள் கொண்டாடலாம். அதன் பழம் பெருமை எதாக இருந்தாலும் சரி, அதன் தற்போதைய சூழ்நிலை ஒரு கிராமாந்திர பவுண்டின் ஞாபகத்தைத் தான் கொண்டுவரும். பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மையிருட்கணம் - - - - - போயின யவு பிரார்த்தனையின் வரிகள் ஜெயசிங்கின் காதுகளில் சாக்சின. க்ா-3