பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பிரார்த்தனை இந்த பிரார்த்தனையை தினமும் ஜெயசிங்தான் ஆரம்பித்து வைப்பான். ஜெயசிங்கின் சாரீரம் ரொம்பவும் இனிமையாக இருக்கும். விடியற்காலை சமயம். இயற்கையின் அமைதி இன் னும் கலையவில்லை. உடல் வருத்தம் மிகுந்த ஒரு வாழ்க்கை நடுவே திடத்தைவேண்டி ஆண்டவனைக் கோரும் ஆத்மசிந்தன; அதை வெளியிட்டு இருதய பூர்வமாக வெளிக் கிளம்பிவரும் வலு மிகுந்த வார்த்தைகளின் ஓசை; காதுகளில் தேன் பாய்வது போல் இனிமையைக் கொட்டும் இழைந்த சாரீரம். இத்தனையும் சேர்ந்து அந்த பிரார்த்தனையை உணர்ச்சி வசமாக்கிக் கொண் டிருக்கும். இன்று அவன் கலந்து கொள்ளவில்லை. பிடி சாம்பலாகி விட்ட தாயின் உருவத்தையே மனக் கண்முன் நிறுத்திக் கொண்டிருந்தான். இரவு முழுதும் அழுது அழுது, அவன் உடம்பு சோர்ந்துவிட்டது. இரு இமைகளும் ஒன்றுசேரும் அளவுக்கு கண்கள் வீங்கிவிட்டன. இருதயம் ஒரே கல்லாகக் கனத்தது. தனக்கும், அவளுக்கும் கடைசியாக நடந்த சம்பா ஷணை நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. அடேயப்பா, நீ போய் சுயராஜ்யம் கொண்டு வருவது கிடக்கட்டும். சொல்வதைக் கேளு என்ருள் தாய். அதற்கு அவன் சிரித்துக்கொண்டே பதில் சொன்னன் : கவலைப்படாதே அம்மா, ஆறுமாதத்துக்குள் சவுக்யமாகத் திரும்பிவிடுவேன். கடவுளை பிரார்த்தனை செய்துகொண்டிரு . அதற்கு பதில் ஒரு வறட்டுச் சிரிப்புடன் அந்தக் கிழவி சொன்னாள், ஆமடா, இந்த கடினமே என்னை அவன் கொண்டு போய் விடவேண்டும் என்றுதான் பதில் நான் பிரார்த்தனை செய்யவேண்டும்; உன் நெஞ்சம் கல்லாகி விட்டதேடா." ஸ் அம்மா உளருதே இப்படி எல்லாம். நான் திரும்பி வரும்போது நீ கல்லுப்போல் இருப்பாய் பார். 'கல்லாக இருக்கிறேனே, மண்ணுகி விடுகிறேனே urrritl போம் என்று பெருமூச்சு விட்டாள். . . . தான் சொன்னபடியே அவள் இன்று மண்ணுகித்தான் விட்டாள். இந்த rணமே என்னேக் கொண்டுபோய் விடும்படி பிரார்த்தினை செய்யவேண்டும், என்று சொன்ன வாக்கு பலித்து விட்டது. அவள் பிரார்த்தனையை ஆண்டவன் ஏற்றுக்கொண்டு விட்டான். ... . . . . . . . ... - *