பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. சு.செல்லப்பா 35 இங்கு அவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஆண்டவன் அவர்கள் பிரார்த்தனைக்கு இரங்காமல் போவான ? பிரார்த்தனை அடிகள் ஜெயசிங்கின் காதுகளில் விழுந்தன. ஜெயசிங் அதை உற்றுக் கேட்டான். தனிமையில் கிடந்து துக்கத்தோடு போராடிக் கொண்டிருக் கும் அவனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் அந்த சமயத்துக் காவது எல்லாவற்றையும் மறந்துவிட்டு பிரார்த்தனையில் ஈடுபட் டிருந்தார்கள். புண்பட்ட இருதயத்துக்குத் தனிமையில் ஆறுதல் கிடைக்கும் என்று அவன் எதிலும் கலந்து கொள்ளாமல் படுக் கையில் புரண்டு கொண்டிருந்தான். ஆனால், தனிமை அவன் துக்கத்தை துாண்டித்தான் விட்டது. ஜெயசிங் கண்களை மூடிக்கொண்டான். மவுனமாக, தனித்து பிரார்த்தனையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பிளுன் போலிருந்தது. ஆனல்-அந்த மவுனப் பிரார்த்தனைக்கு, அவன் மனத்தை அதில் லயிக்கச் செய்ய சக்தி இல்லை. மனதுக்கு பிரார்த் தனையை கிரகித்துக்கொள்ளும் பக்குவம் அப்போது இல்லை. திரும்பத் திரும்ப தாய் தான் அவன் மனக் கண்ணில் சுழன்று கொண்டிருந்தாள். முதலில் அவள் தடியை ஊன்றிக்கொண்டு, தட்டுத் தடு மாறிக்கொண்டு அவனுக்கு முன் நடந்து வந்தாள். வந்தவள் சட்டென நின்று தலையை உயர்த்தி அவன் முகத்தை பார்த்தாள். அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அடே, நீ போக வேண்டாமடா: கிழவி வார்த்தையைக் கேளுடா என்று கெஞ் சின பார்வை. அதையடுத்து-அவன் நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டு, சவுக்யமாகப் போயிட்டு வாடாப்பா என்று விடை கொடுத்தனுப்பிய அந்த அமைதியான முகம். ஆனால், வெளிக்கு அமைதியாகத் தோன்றின. அந்த முகம். உள்ளுக்குள் அடிக்கும் புயலை எப்படி மறைத்துக் காட்டியது என்பதும் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. ' கடைசியில் அவள் வந்து நின்ருள். அவள் கண்கள் முன் போல் அசையவே இல்லை. விழிகளில் ஒளியில்லை. அவள் முகம் ஒருவித உணர்ச்சியும் இன்றி, மரத்துக் கிடந்தது... தாயின் பிரேதத்தை அவுன் பார்க்கவில்லையானலும் இந்தக் கற்பனைத் தோற்றம் அவனை நடுக்கி எடுத்தது. அதற்குமேல் அவளுல் தாங்க முடியவில்லை. கண்களை வெடுக்கென அகல விழித்துச் சுற்றுமுற்றும் பரபரப்புடன் விழித்தான்.