பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பிரார்த்தனே பிரார்த்தனை அவன் காதுகளில் தெளிவாக விழுந்தது. ஒரு சின்ன யோசனை ; விருட்டென்று எழுந்தான். தான் வழக்கமாக நிற்கும் இடத்தை நோக்கி நடந்தான். பிரார்த்தனை யில் வாய்விட்டு ஈடுபட்டால் இருதய கனம் சிறிது குறைய லாம் என்று நினைத்தான் போலும். பிரார்த்தனையின் இரண்டாம் அடியைப் பாடிக்கொண்டிருந் தார்கள். அதேசமயம் தலைவனுக்கு அடுத்தாற்போல் வந்து நின்ற ஜெயசிங், நான் பாடுகிறேன் என்ருன் தினமான குரலில்: தலைவன் வியப்புடன் அவன் பக்கம் திரும்பி முகத்தை ஒரு தரம் ஆராய்ந்தான். மிருதுவான குரலில், பாடுகிருயா, நீ, சரி, பாடு, பாடு' என்ருன். கைகளைக் கூப்பிக்கொண்டு மூடிய கண்களுடன் தலைவன் விட்ட இடத்திலிருந்து பிரார்த்தனையைத் தொடரப் போனன். முதலிலிருந்தே ஆரம்பித்துவிடு' என்ருன் தலைவன். பிரார்த்தனை அன்று சிதறுண்டு போனதால் ஏற்பட்ட அருசியைப் போக்கி ஒருமனதுடன் ஈடுபட விரும்பும் கோஷ்டியும் அதை ஆதரித்தது. பிரார்த்தனை புதிதாக ஆரம்பமானது. பொழுது புலர்ந்தது...... என்று ஆரம்பித்தான் ஜெயசிங். அவன் குரல் ரொம்பவும் பலவீனமாகப் புறப்பட்டது. அந்த பலவீனத்தை வெளிக் காட்டிக்கொள்ள விரும்பாதவன்போல், துக்கத்தை மென்று விழுங்கி, நெருங்கிப் போயிருந்த தொண்டையை இரண்டொரு தரம் கனத்துக் கொடுத்து இளக்கி, வலுவேற்றிக்கொண் டான். மனத்தைப் பிரார்த்தனையில் ஈடுபடுத்த, அவன் குரல் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து கொடுத்துக்கொண்டே வந்தது. எழுபசும் பொற்சுடர். என்ற இரண்டாவது அடியை அவன் திருப்பித் திருப்பிப் பாடும்போது குரல் தன் சுயமான இனிமையைப் பெற்று விட்டது. அதோடு தன்னை மறந்த உணர்ச்சி வேகமும் அதில் இணைந்தது. அந்த உணர்ச்சி வேகத்தைக் கவனித்து விட்ட தலைவன் அதைச் சற்று அடக்கித் திருப்பிவிட எண்ணி, ஜெயசிங் கொஞ் சம் அடக்கிப்பாடு என்று காதுகளில் லேசாகச் சொன்னன்.