பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. சு. செல்லப்பா 37 ஆனால், வெதும்பின நெஞ்சிலிருந்து விசும்பி எழும் அந்த பிரார்த்தனையில் ஒன்றுபட்டிருந்த ஜெயசிங்கின் காதுகளில் அவை பட்டதாகத் தெரியவில்லை; தொழுதுனே வாழ்த்தி... ... என்ற மூன்ருவது அடியைத் திருப்பிப் பாடிவிட்டு நான் காவது அடியை பாட ஆரம்பித்தான். விழிதுயில்கின்றன இன்னுமென்...தா...யே... அவன் உயர்த்திப் பாடிக்கொண்டிருந்தான் திடீரென அந்தக் குரலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. அந்த நடுக்கத்தோடேயே அவன் தொடர்ந்தான் : வியப்பிது...காண்...பள்ளி எழுந்...தரு...வா.யே... அவன் குரல் நடுக்கம் உச்ச நிலையை அடைந்துவிட்டது; எப்படியோ தட்டுத் தடுமாறி அந்த வரிகளை முடித்து விட்டான். அதை முடித்துவிடும் வரையில் தான் சமாளித்துக் கொள்ள முடியும் என்று அவன் நினைக்கவே இல்லை. அவன் உடம்பு குலுக்கி எடுத்தது. 'ஜெயசிங் என்னது ? தலைவன், திடுக்கிட்டுப் போய் கேட்டான். இந்த அடியை திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்த கோஷ்டி இதைக் கவனிக்கவில்லை. அவர்கள் பாடித் திரும்பவும் ஜெயசிங் பாடுவதை எதிர்பார்த்து நிறுத்தினர்கள். பிரார்த்தனை வரி கிளம்பவில்லை. விம்மி அழும் குரல்தான் அந்த நிசப்தத்திலிருந்து தெளி வாகக் கேட்டது. ஜெயசிங் முகத்தைக் கைகளில் புதைத்துத் தேம்பிக்கொண்டிருந்தான். அவன் தலை, அருகில் நின்றிருந்த தலைவன் மார்போடு அணைத்திருந்தது. தலைவன் ஜெயசிங்கின் தோள்பட்டையை மிருதுவாக விரல் களால் தட்டிக்கொடுத்துக் கொண்டே, ஜெயசிங்' என்று கூப்பிட்டான். பதிலில்லை. . : . ஜெயசிங் தலைவன் G576ಗಿತು முகத்தை அழுத்திக்கொண்டு கதறினன்,