பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பிரார்த்தனை ஜெயசிங் 1 தலைவன் குரலிலும் நடுக்கம் ஏற்பட்டது. ஆனல், அதை அமிழ்த்தி, ஜெயசிங்கின் கவனத்தைத் திருப்பும் படியான அதட்டின குரலில், அவனுடைய இரண்டு தோள்களை யும் குலுக்கிக்கொண்டே கத்தினன். ஜெயசிங், சின்னக் குழந்தை மாதிரி...இதோப் பார்." ஜெயசிங் தன் முகத்தைத் திருப்பி, தலையை உயர்த்திக் கொண்டான். அவன் முகம் கண்ணிரால் தொப்பலாகி இருந்தது. ஜெயசிங், என்னைப்பார்,' என்று அவன் முகத்தைத் தனக்கு நேராகத் திருப்பினுன் தலைவன். - துக்கம் வெடித்து நிற்கும் முகத்தோற்றத்துடன் அவனே ஜெயசிங் பார்த்தான். தலைவன் முகமும், அவன் பார்வையும் ஜெயசிங்குக்கு எதையோ உணர்த்த விரும்புவது போலிருந்தது. ஜெயசிங், சாந்தப்படுத்திக்கொள்.' நானும் தான் பார்க்கிறேன் ; முடியவில்லையே. ’ அவன் தலை கீழே கவிழ்ந்தது. முடியவில்லையா? என்ன சொல்கிருய் ஜெயசிங் தலை வன் படபடப்பான குரலில் கேட்டான் : உனக்கா முடிய வில்லை ? பேஷ், எனக்கு வெட்கமாக இருக்கிறது. உனக்கு முடியவில்லை என்பது. ' தலைவன் விடுவிடெனப் பேசினதைக் கேட்டு ஒரு கேள்விப் பார்வையுடன் தலைவன் பக்கம் திரும்பினன். தலைவன் சேர்த்துச் சொன்னன், ஜெயசிங், உன்னே ஞாப கப்படுத்திக்கொள். நீ ஒரு...நான அதை உனக்கு ஞாபகப் படுத்த வேண்டும் ? உன் பிரதிக்ஞை-அதை மறந்து விட்டாயா 虏?” அந்த வார்த்தைகள் அவனை வேகமாக ஆகர்ஷித்தன, கீதோப தேசம்போல. அவைகளின் அர்த்தத்தை அறிந்து கொண்டவன் போல முகக்குறி காட்டினன். - அவன் அழுகையை அடக்க முயன்ருன் தலைவன் அதைச் சுட்டிக் காட்டிவிட்ட பிறகு அவன் அழுவது நன்ருக இருக்காது, குழந்தைத்தனமாகும். விக்கலுக்கும், விம்மலுக்கும் நடுவே, தலைவனுக்கு ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தான். ஆனல் அவளுல் ஒன்றும் பேச முடியவில்லை. * அவளுல், செய்ய முடிந்ததெல்லாம் தலைவன் முகத்தையே வெறித்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது தான்.