பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. சு. செல்லப்பா 39 விக்கலும், விம்மலும் உள்ளடங்கிப் பெருமூச்சாக வெளி வந்தது. ஜெயசிங் ' என்று மிருதுவான குரலில் தலைவன் அவனை அழைத்துச் சொன்னன் : நீ கதறினலும் திரும்பக் கிடைக்காத - திரும்பி வர முடியாத-ஒரு முடிவிடத்தைப் போய் அடைந்து விட்டாள் அவள். அவளிடம் நீ அன்பு செலுத்திய்ை; பாசம் வைத்திருந்தாய்; அந்தக் கிழவியை, கைத்தாங்கலாக அவளை அழைத்துச் சென்றெல்லாம் உன் கடமையைச் செய்தாய் , அந்தத் திருப்தி உனக்கு இருக்கிறது. தாய் என்ற, வாழ்க்கையில் ஒரே தரம் கிடைத்திருக்கும் பொக்கிஷத்தை இழந்துவிட்டால்இழந்து விட்டதுதான். ஆனல்-' - தலைவன் பேச்சைச் சட்டென நிறுத்திவிட்டு, தன்னைச் சுற்றி ஒருதரம் கண்களைச் சுழற்றிவிட்டுத் திரும்பினன். ஜெயசிங் தீர்க்கமாகத் தலைவனையே பார்த்துக் கொண்டிருந் தான். தலைவன் முடிவு வார்த்தைகளை அவன் கேட்க ஆத்திரப் பட்டமாதிரி இருந்தது. தலைவன் குரல் உயர்ந்தது, எல்லோருடைய காதிலும் கேட்கும்படியாக பலத்து ஆரம்பித்தான் : ஆனால், ஜெயசிங், நீ உன் தாயை இழந்து விடவில்லை: அதோ பார். அங்கே இருக்கிருள், உன் தாய்; உன் தாய் மட்டுமல்ல ; நம் எல்லோருடைய தாயும்-அவளைப் பார்க்க வில்லையா ? - அந்தத் தாய்க்கு, தன்னைவிடச் சிறந்ததான ஒரு சக்திக்கு உன் தொண்டை, கடமையைச் செய்யத்தான் தன் இருப் பிடத்தைக் காவி செய்துவிட்டுப் போயிருக்கிருள் அவள்-அந்தக் கிழவி, உன்னுடையவள்...புரிகிறதா? அவள் தன்னைத் தியாகம் செய்து கொண்டுவிட்டாள் ; பதிலுக்கு உன்னிடமிருந்து அதை எதிர்பார்க்கிருள்...சரி பிரார்த்தனையைப் பாடு...பாடு..." வந்தேமாதரம் ! தலைவன் கண்களை மூடிக்கொண்டு தன் குரலை நீட்டி உயர்த்திக் கோஷித்தான். - ஜெயசிங் பிரார்த்தனையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பாட ஆரம்பித்தான். OOO