பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. நா. குமாரஸ்வாமி நர நாராயணன் ஓவென்ற சுத்தவெளியில், இருளோ ஒளியோ தோன்ருத ஒரு பெரும் பாழில் உறங்கிய, பெயர்-உருவம் -தன்மை எதுவும் இராத பரம்பொருள் விழிப்புற்றுத் திடுமென நினைத்துக்கொண் டது. அதன் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கியது- ஆனந்தாத் ஏவ கலு இமாகி பூதாகி ஜாயந்தே . விளையாட்டாக அந்தச்சூன்ய வெளியில் பல கோடி அண்டங்களைப் பண்ணி பறக்கவிட்டது. அந்த பலூன்கள் சில வெடித்தன; சில அவிந்தன; சில நின்று சுழன்றன. அண்டத்திலிருந்து உண்டைகள் தாமாகவே சிதறிக் குட்டிலோகங்களாக மாறுவதைக்கண்டு பரம் பொருளான அந்த பயங்கரச் சிசுவுக்குப் பெருவியப்பாக இருந்தது. இன்னும் எந்த விதமெல்லாம் ஆகிறதோவென்று வேடிக்கை பார்த்தது. இவ்வளவு படைத்தோமே ? எங்கோ ஒரு குறை இருக் கிறது?’ என்ற நினைவு வந்தது அதற்கு அந்த வேதனையில்ை அதன் இதயத்தில் ஓரிடம் வீங்கியது. அது பழுத்த கனிபோல் விண்டு அதன் கையிலேயே விழுந்தது. அதைப் பார்த்துக் கண்ணிர் விட்டது, கடவுள்-சிசு. வெம்மையான மூச்செறிந்தது. இளகிய அந்த இதய உருண்டையில் அவருடைய கைரேகைகள் பதிந்தன. அணுச்செறிந்த நிலனும் அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும், அவ்வா காயத்தைத் தடவி வரும் காற்றும், அக்காற்றின் இடையே தலைப் பட்ட தீயும், அத்தியோடு மாறுபட்ட நீருமாக ஐந்துவகை பூத இயற்கைகள் அதில் தோன்றின. - பூகிலாய வைந்துமாய்ப் புனற்கணின்ற நான்குமாய் தீகிலாய மூன்றுமாய்ச் சிறந்த காலிரண்டுமாய் மீகிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய் அதுதான் நாம் இப்பொழுது வாழும் உலகு.