பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. நா. குமாரஸ்வாமி 41 கடவுளுக்குப் பரம திருப்தியாகிவிட்டது. இது மற்ற கோளங்களைப்போல் செந்நிறமாகவோ, வெண்ணிறமாகவோ இராமல் பச்சைப் பசேல் என்று கண்ணப் பறித்தது பப்ரூம், க்ருஷ்ளும் ரோஹிணிம் விச்வரூபாம் த்ருவாம் பூமிம் சூரிய சந்திர நகrத்திரங்களின் ஒளிபட்டு வானவில் நிறங்களை யும் அவ்வப்போது காட்டியது. கடவுள்-குழந்தை அந்தரத்தில் அவ்வதிசய ரசகுண்டைச் சுழற்றிவிட்டது. சரிதான், இதைச் சிருஷ்டி செய்துவிட்டேனே, இதைப் பாதுகாக்க யாராவது வேண்டுமே ? என்று பரம்பொருள் யோசித்தது. அகடனகடன படியஸியான (நடக்க முடியாததை நடக்க வைக்கும்) கடவுள் நினைத்தால் ஆகாதது ஒன்று உண்டோ ? அவருடைய மானஸபுத்ரி வெளியே வந்தாள். அவள்தான் இயற்கை (ப்ரக்ருதி) தன் அருமைச் செல்விக்கு அந்த மணி உருண்டையைக் காட்டினர். அது நிரம்ப ஜோராக சுழன்று கொண்டிருந்தது, வானவீதியில் ' எனக்குத் தா அப்பா ! என்று உதடு பிதுங்க அழுதாள் இயற்கை. அழாதே; அதை உனக்குத்தான் தரப்போகிறேன் என்ற தும் கடவுளார், தம் மகளே இப்புவியில் பிரதிஷ்டை செய்து விட்டார். இந்த உலகில் வந்து சேர்ந்ததும் தந்தையைக் காணுமல் தர்திமாதா கோவென்று கதறினுள் " அப்பா, இங்கே எனக்கு விளையாட ஒன்றுமே இல்லையே’ பொம்மை ஏதாவது பண்ணி அனுப்பு ’’ தம் மானஸ்க்குழந்தையின் அழுகை அவர் இதயத்தைத் தொட்டது. அருள் சுரக்கும் கருணையில் மரம் செடிகளை உருவாக் கினர். அவற்றைத் தின்று வாழ விகடாகாரமான விலங்குகளை உண்டாக்கினர். ஊர்வன, பறப்பன, ஒடுவன, மிதிப்பன யாவும் காலக்கிரமத்தில் செய்து செய்து அனுப்பினர். . மாநில மடந்தைக்கு எதை வைத்துக்கொண்டு விளையாடுவது என்று தெரியவில்லை. பிடிக்காத பொம்மையை உடைத் தெறிவாள். பிதாவின் குரல் கேட்டது-" ചെTുക്കഥ போதுமா 2 * * அப்பா வேடிக்கையான பொம்மையெல்லாம் அனுப்பி வைத்தாய். ஆல்ை... என்று இழுத்தாள் இயற்கை.