பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கர நாராயணன்

  • இன்னும் என்ன? " என்ருர் கடவுள்.

ஏதோ ஒன்று வேண்டும்போல் இருக்கு. ஆனல் என்ன வென்று சொல்லத்தெரியவில்லையே! ' என்ருள் கடவுளின் மகள். அவர் செய்து அனுப்பிய சாமான்கள் ஒவ்வொன்றும் அழகாகத்தான் இருந்தன. மரங்கள் எல்லாம் விசித்திரமாகப் பூத்தன. பைந்நிறக் காய்களுடன் குலுங்கின. செங்கனிகளைச் சிந்தின, விதவிதமாகப் புள்ளினங்கள் இறகு விரித்து ஆடின; தீங்குரல் எடுத்துப் பாடின. சிங்கத்தின் பிடரி, புலியின் உடற் கீற்று, மானின் விழி, யானையின் தும்பிக்கை, புல்லின் சுமை, கடலின் நீலம், பனியின் வெண்மை, மேகத்தின் கருமை, அதனி டையே விளையாடும் மின்னலின் ஒண்மை...... எவ்வளவு இருந்தும் என்ன? கடவுளின் பெண்ணுக்கு மனசில் ஒரு பெருங் குறை இருந்து வந்தது. அம்மா, உன் வருத்தம் எனக்கு இப்போது புரிகிறது. இதேபோல் ஒரு சமயம் நானும் வேதனைப்பட்டேன். அதிலிருந்து பிறந்ததுதான் இம்மண்ணுலகு. என்னபண்ணுவது? கஷ்டப் பட்டுக் கண்ணிர் விட்டால்தான் எதுவும் கைகூடும் ஸ் தயோ அதப்யத ஸ் தயஸ்தப்த்வா ஸர்வம் அஸ்ருஜத் யதிதம் கிஞ்ச ’ இந்த மண்ணையும் உன் கண்ணிரையும் பிசைந்து உனக்கு எந்தமாதிரி இஷ்டமோ அந்தமாதிரி பொம்மை பண்ணிக்கொள் போ... ! என்ருர் கடவுள். வழி ஏற்பட்டது; பொம்மைகளைச் செய்தாள் தர்திமாதா: எல்லாம் மனிதப் பொம்மைகளே, எத்தனையோமாதிரி; எத்தனையோ நிறம். சில குள்ளம், சில உயரம், பூனைக்கண்கள் கொண்டவையும் இருந்தன. நீண்ட முகங்களும் அகன்ற முகங் களும் தென்பட்டன. எல்லோரையும் தன் தந்தையின் சாயலா கவே செய்திருந்தாள். தோற்றத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படையில் யாவும் ஒரே அச்சில் அமைந்தவை. அப்பாவைக் கூவி அழைத்தாள் பூமிதேவி-' ஓடி வா ! இதோ நீ சொன்ன படியே பொம்மைகளைச் செய்துவிட்டேன்...... அப்பா, இவை அசைய மாட்டிேன் என்கின்றன ஏன் ? என்ருள். தம் அருமை மகள் இயற்றிய கைவேலையைப் பார்த்துக் கடவுள் தம்மையும் மறந்து அந்த மனிதப் பதுமைகளுக்கு உயிரோடு கூட தம் அறிவின் ஒரு நுண்பொறியையும் தந்தார். அன்று தொட்டு மனித பொம்மைகள் இடம்விட்டு இடம் பெயர லாயின. யோசனைபண்ணத் தொடங்கின. நாக்கைக்கொண்டு விசித்திர மொழிகளைப் பேசலாயின. -