பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் காலத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறியச் செய்தவர் அவர். தமிழ் இலக்கியங்களை வெளி உலகுக்குக் கொடுத்ததோடு நில்லாமல், வெளி உலகில் ஏற்பட்டிருந்த உரைநடையின் சிறுகதை உருவத்தைத் தமிழ் இலக்கியத்துக்குக் கொண்டுவந்த வரும் அவரே. மறுமலர்ச்சித் தமிழுக்குச் சிறு கதைத் துறையில் வித்துான்றியவர் வ. வே. சு. ஐயர் என் பதையும், அவரது மங்கையர்க்கரசியின் கர்தல் ’ என்ற சிறுகதைத் தொகுதி, ஒரு தேசிய வாதியின் தமிழ்ப் பணிக்குச் சான்று கூறக்கூடியது என்பதை யும் நாம் அறிய வேண்டும். காந்திஜி மக்கள் இயக்கத் தலைவராக விடுதலைப் போராட்டத்தில் குதித்த பிறகே, ஆங்கிலத்தின் பிடியிலிருந்து நம் நாட்டின் எல்லாத் தேசீய மொழி களும் விடுதலே பெறத் தொடங்கின என்று கூற வேண்டும். நாட்டின் அந்தந்தப் பகுதியில் அந்தந்த மக்கள் பேசும் மொழியிலேயே பேசவும், எழுதவும் வேண்டும் என்று அந்தக் காலத்திலேயே அறை கூவல் விடுத்தவர் காந்திஜி. ஆங்கிலத்தின் ஆதிக் கத்திலிருந்து தமிழ் விடுபட்டு மக்களிடையே வெள்ள மெனப் பாய்ந்தோடத் தொடங்கிய காலம் அது தான். - மக்களிடையே வெள்ளமென நாட்டுப் பற்றை யும், மொழிப் பற்றையும் பரப்பிய பணி தமிழ் எழுத் தாளர்களையும், தமிழ்ப் பத்திரிகையாளர்களையுமே சாரும். இன்றையத் தமிழைப் போல் தூய தமிழாக வோ, பிறமொழிக் கலப்பற்ற தாகவோ, எளிய தமிழாக வோ முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அது இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனல் அது புதிய விடுதலை பெற்று வீறுகொண்டு வந்த மக்களின் மறு மலர்ச்சித் தமிழ் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பாரதியார், திரு. வி. க., திரு. வி. கவின் சீடரான கல்கி '. ரா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் எழுத்துக் கள் அணை உடைத்த வெள்ளமெனப் பொங்கி,