பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. நா. குமாரஸ்வாமி 43 ஜநம் பிப்ரதி பஹாதா விவாசலம் நாகா தர்மாணம் ப்ருதிவி யதெளகலம் . குட்டிக் கடவுளான இந்த மனிதர், கடல் காடு மலையெங்கும் பரவி புது மழையில் கலித்த பயிரினம் கதிருடன் ஆடுவது போலவும், இளவேனிலில் இலை செழித்துப் பூக்கும் மாஞ்செடி களைப் போலவும் எங்கும் கிளைத்துப் பெருகினர். கடவுளின் மகள், இம்மாநிலத்தின் தெய்வம், அப்பா என் இஷ்டம் பூர்த்தியாகிவிட்டது ' என்ருள். இவளை மக்கள் பல உருவில் வழிப்பட்டனர். மாட கூடம் மலிந்த நகரங்களை எழுப்பி இவளுக்கு அணிகலமாகச் சாத்தினர். இனிய பொழிலும் நெடிய வயலும் போர்த்த கிராமங்களை உருவாக்கி இவளுக்கு மாலையாய்ப் போட்டனர். பாட்டும் கூத்துமாக மாந்தர் களிப்பெய்தினர். 'அம்மா, உனக்கு நாங்கள் செய்யும் அலங்காரங்கள் எப்படி இருக்கின்றன ? என்று ஒருமுகமாகக் கேட்டனர் மக்கள். 'பலே பேஷ். நீங்கள் எல்லாம் என் தந்தையைப் போலவே திறமை மிக்கவர் ' என்ருள் அன்னை. " நீதான் எங்கள் தெய்வம். அது யாரம்மா உன் தந்தை' என்றனர் வியந்து. இயற்கைதேவி, தாரகைகள் திரண்ட வானைக் காட்டி, 'என்' தந்தை புனைந்த கோலத்தை அதோ பார்த்துப் பிரமியுங்கள். வானில் சுழலும் அத்தனை லோகங்களும் அவர் இயற்றியவை '’ என்ருள். f : அவர் எங்கே இருக்கிருர் ? கண்ணுக்குத் தெரியவில்லையே?’’ என்றனர் மக்கள். மிகவும் சங்டமான கேள்விதான்! மனிதனுக்குத்தான் இந்த மாதிரி கேட்கத் தெரியும் இயற்கையன்னையின் முகம் வாடியது. என் தந்தை இருக்கும் இடம் மனேவாக்குக் காயத்திற்கு எட்டாத ஓர் அதிசய நாடு. தூங்கும்போது என்னை அந்த இடத்தி லிருந்து கொண்டுவந்து இங்கே விட்டார். அதோ புகைபோல் தோன்றும் நகrத்திரக்குவைக்கும் அப்பால் மேலோடு கீழாய் விரிந்தோன் காண், அந்தமும் ஆதியும் அகன்றேன்காண், பந்தமும் வீடும் படைப்போன் காண், நிற்பதும் செல்வதும் ஆனேன் காண்' என்ருள்.