பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நர நாராயணன் மண் உலகத்தவர் தம்மைக் காண விழைவதைப் பார்த்துக் கடவுளார் சிரித்தார். என்னைக் காண ஆசைப்படுகிறீர்களா? ' என்ருர், உலகத்தவர் உள்ளத்தில் இக்குரல் கேட்டது. பெரும் கிளர்ச்சி மூண்டது. கஸ்மை தேவாய ஹவிஷா விதேம (யாருக்கு இவ்வுணவு உரித்து) என்று வேதம் முழங்கியது. " நான் இருக்கும் இடத்திற்கு வர உங்களுக்கு வழி தெரிய வில்லையா? ' என்ருர் கடவுள். "ஆமாம், ஆமாம் ' என்று மனித இனம் இருளில் தடுமாறி யது. தெய்வீகக் குரல் வரும் திசை தெரியவில்லை. இதோ காட்டுகிறேன். ஆனல் ஒரு நிபந்தனையின் பேரில் தான் ' என்ருர், ' என்னவோ? " என்று ஏங்கியது மனித உள்ளம். முதலில் உங்களையே நீங்கள் அடக்கியாளுங்கள். வென்று வாருங்கள். என் நாட்டுக்கு வர வழி திறக்கும் ' என்ருர். அந்த அமோக சக்தி எங்களிடம் ஏது? ' என்றது மனித வர்க்கம். ! உங்களிடமே மறைந்து இருக்கிறது, வெளிப்படுத்துங்கள்’’ என்றது கடவுள் வாணி. மனித இனம் கடவுளின் திருவாசகத்தை வேறு விதமாக விபரீதமாகப் புரிந்துகொண்டது. மக்களிடையே யுகங்கள் தோறும் பெரும் பூசல் மூண்டது. குருதி வெள்ளம் உலகை மாசு படுத்தியது. ஜாதிப்போர், சமயச்சண்டை, உரிமைப் போட்டி, கடைசியில் நிறச்சண்டை ஒவ்வொன்ருக எழுந்து மனித சமுதாயத்தை அலைத்து உருக்குலைத்தன. சகடக்கால் போல் நீதியும் அநீதியும் மாறிச் மாறிச் சுழன்று வந்தன. ஊர்கள் பிணக்காடாயின. எலும்பு மேடுகள் மீது அழகிய நகரங்கள் தோன்றின. மக்கள் குலம் அழிவதும் தோன்றுவதுமாய், அரசர் கள் அட்டகாசம் புரிவதும் மஹாபுருஷர்கள் அமைதி தருவதுமாய் விரைந்தது காலம், யாருக்கும் எட்டாத இடத்தில் பரமன் வெறும் ஸாகரிபூத மாக இதையெல்லாம் கவனித்து வருகிருன். திடுமென ஒரு இடிக்குரல் உலகைக் குலுக்கிப் போடுகிறது. வல்லான் ஒருவன் வெற்றிக் கோலத்துடன் கடவுளை எள்ளி 'இதோ உன்னைவிட நான் எவ்வளவு பெரியவன், எவ்வளவு பலசாலி! என்னைப்பார்த்து நடுங்கு ' என்று இரைகிருன்.