பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. நா. குமாரஸ்வாமி 45 கடவுள் தனக்குள் சிரித்துக் கொண்டார்- Lஅல்பாயுசே ! ’’ ' என் எதிரே பிரத்யகrமாகுவ்ாய்... ஒருகை பார்ப்போம் என்ருன் வல்லான். அண்டமெல்லாம் குலுங்கும்படி ஒரு நகைப்பு கேட்டது. நான் எங்கும்தான் வியாபித்து இருக்கிறேன். உன் ஊனக் கண்களுக்குத் தெரியாது. உன் அகத்திலும் புறத்திலும் பரவி இருக்கிறேன். உன் அகந்தையிலும் நான் குடிகொண்டு இருக் கிறேன். 'அஹமஸ்மி. என்னைக்காணவேண்டுமானுல் மனிதன் தன்னைத் தானே வெல்லவேண்டும். இதுவே அதன் மர்மம் ' என்ருர். 'ஹா ஹா, ஐயோ ஐயோ என்று உலகமே அரற்றியது. வல்லான் வாளையுருவி பெரும் எலும்புக் குவைக்கு மேல் நிற்பதைக் கடவுள் கண்டார். அவன் கீழே உலகமே நொறுக்குண்டு துளித் துளியாக நசுங்கியது. மனிதர் அவனையே கடவுளென வணங்கி னர். ' ஒய் கடவுளே! இப்போது பாரும். யார் பலசாலி, நீயா, நான? ' என்ருன் வல்லான். -

  • சரிதான், மனிதர் உண்மையில் இதை ஒப்புக் கொள் கிருர்களா? அவர்களை நீயே கேள்’’ என்ருர் கடவுள்.

வல்லான் சீறியெழுந்தான். உங்களில் யார் என்னை வழி படாதவன் ? என்று கர்ஜனை புரிந்தான். - ‘' எவரும் இல்லை, எவரும் இல்லை” என்றது மனிதன் நாக்கு. ஆனல் அவன் உள்ளம் மட்டும் இதை மறுத்தது. கும்பலில் ஒரு குரல் தெளிவாக, ' நான் உனக்குத் தோற்க வில்லை என்றது. 1 யாருடைய குரல் அது ? ' என்று வல்லான் துள்ளிக் குதித்தான். எங்கள் உள்ளத்தின் குரல். கடவுள்தான் அங்கிருந்து பேசுகிருர்’ என்றது அதே குரல். - ஆ தெரிகிறது எல்லாம். அந்தக் கடவுளின் சூழ்ச்சிதான். அந்தக் கடவுளையும் ஒரு கை பார்த்து விடுகிறேன். அடிமைகளே, அவனிடம் முறையிட்டுக் கொண்டீர்களா? இதோ புழுவை நசுக்கு வது போல் உங்களைக் கூழாக்கி விடுகிறேன்' என்ருன் வல்லான். இல்லை' என்ருன் வல்லான்காலில் குழைபடும் ஓர் வீரன், " என்ன இல்லை ? .