பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நர'நாராயணன் இது கடவுளின் சூழ்ச்சியன்று. இதோ பயமின்றிக் கூறு கிறேன். என் உள்ளத்தில் எழுந்த உறுதி இது. நான் உனக்குத் தோற்கவில்லை என்ருன் அவ்வீரன். ஜாக்கிரதை ’’-அணுகுண்டுபோல் வல்லானுடைய குரல் வெடித்தெழுந்தது. ' நாங்கள் அடிமையல்ல, அடிமையல்ல என்ற ஓசை காற் ருெலியில் கேட்டது. சுற்றுமுற்றும் நோக்கி வல்லான், யார் அது?’ என்று பாய்ந்தான். கடவுள் ஏழைப் பங்காளனுக நின்று, மனித உள்ளத்தின் அறைகூவல் இது ; வேறில்லை' என்ருர், சரி, இவர்கள் உயிரை வதைப்பதோடு உணர்வையும் ஒடுக்கி ஆளப் போகிறேன் பார் !' என்று சவால் கொடுத்தான் வல்லான். அப்போது கடவுள் இடி இடியென்று நகைத்தார். இருண்ட வானிடையே நrத்திரங்கள் உதிர்ந்தன. பாரின் முதுகு நெளிந் தது. கடல் விம்ஹாநந்த தாளம் கொட்டியது. வல்லவனுடைய கொடிய அடக்குமுறை தாண்டவமாடியது. மனிதர் உள்ளத்தில் குருத்துவிட்ட கொள்கைகளை இனவெறி பிடித்தவன் நசுக்க முயன்ருன். சுதந்திர தேவதை குகைக்குள் பதுங்கிக் கொண்டாள். இருந்தும், நாற்றிசையும் “அச்சமில்லை, அச்சமொன்று மில் லையே!” என்ற சப்தமே பேரிகைபோல் முழங்கியது. இது வெஞ் சிறையில் வாழும் சாத்வீகர்களின் இதயகீதம் வரவர அந்த கோஷம் வலுத்தது. வல்லான் நெஞ்சினுள்ளும் திகிலே மூட்டி யது ; அவன் உடலை நடுக்குறச் செய்தது. "இதோ என் கடைசி தண்டனை உங்களுக்கு ' என்று கச்சை யைக் கட்டிக்கொண்டு எழுந்தான். -

  • அச்சமில்லை, அச்சமில்லை ೯Tr@T அந்த சாத்வீகவீரன் சிறைக்குள்ளிருந்து.

வான், வையம், விரிகடல் எங்கும் இந்தத் தைரிய நாதம் எதி ரொலித்தது. எந்நாட்டினரும் இந்த மந்திரத்திற்குச் செவி சாய்த்தனர். அடிமை மக்கள், அடக்கப்பட்டோர், அகதியாக அழுவோர் உள்ளத்தில் நம்பிக்கைச் சுடரைக் கொளுத்தியது. இருள் விலகி உதயமாவதைக் காட்டும் பறவையின் குரல் போல் அஞ்சேல்!” என்ற வாக்கு எவர் உள்ளத்திலும் பதிந்தது.