பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. ங்ா. குமாரஸ்வாமி 47 மக்கள் திரளாக எழுந்தனர். இன்முகமாக, " இருளினின்று ஒளியை அடைவோம் ; பொய்யிலிருந்து மெய்யினைக் கண்போம்; மரணத்திலிருந்து அமரநிலை எய்துவோம் ” என்று பாடிக் கொண்டே தியாகத் தீயில் குதித்தனர். சிறைக் கூடங்கள் முறிந்தன. இரும்புத் திரைகள் விலகின. ஏகாதிபத்யத் தளைகள் விண்டன. வெற்றியை நோக்கி வீரர்கள் விரைந்தனர். - வல்லான் எழுப்பிய அகந்தைக் கோட்டை தகர்ந்தது. யுக புருஷன் முன்னணியில் சென்ருன். அவன் வேய்ங்குழல் அஹிம்சை ராகத்தை ஊதியது. படமெடுத்த அதிகார வர்க்கம் பணிந்து விட்டது. இன்றும் இருக்கிறதே கடைசிக் காட்சி...... பெரிய சோதனை, வகுப்புவாதம் வீறிட்டெழுந்தது. நாடுகள் கூரிடப் பட்டன. அன்பு நெறியில் செல்ல எல்லோரையும் அழைத்தான் சாத்வீகவீரன். வகுப்புவாதம் அவனைச் சுட்டது. "இப்பொழுதாவது சொல்-நீ தோற்று விட்டாயா ?” § {: இல்லை." மறுபடியும் சுட்டது

  1. & இல்லை." !)

மூன்ருவது முறையும் சுட்டது ! இல்லை '-அப்பொழுதும். உலகத்தவர் ஒன்று கூடினர் ; இந்த அதிசயத்தைப் பார்த்து வியந்தனர் ; விழி நீர் பெருக்கினர். " உனக்கினி யம பயமேது? ” என்று ஒருவன் பாடினன். 1 யார் நீ?" என்ருன் முடி தாழ்ந்த வல்லான். பாட்டுக்கோர் புலவன் 1’’ - அப்படி யென்ருல்?’’ அதுவா, நான் புதுமையைச் சொல்லும் குடுகுடுப்பை ஆண்டி.’’ எதற்காக இந்தப் பாட்டு ' உடல் அழிந்தாலும் உயிர் அழியாது. இப்பெரு வெற்றி யால் மனிதர் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பீதி, அவநம்பிக்கை அசூயை யாவும் விலகின.' வல்லான் கையிலிருந்து கொடிய அஸ்திரம் மண்ணில் விழுந் தது. அவனுக்கு என்புவரை நடுங்கியது.