பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நர நாராயணன் ஓர் அபூர்வமான சுடர் தரையில் கிடக்கும் சாத்வீகப் போர் வீரன் மீது வட்டமிட்டது. மெல்லிய குரல் கேட்டது- ஹே ராம் !-நீ எங்கே-எங்கே !! தத் த்வம் அலி-உள்ளத்தில் என் குரலைக் கேட்டவன் நீ ஒருவனே. அன்பு நெறியில் சென்ற உனக்கு நான் சிக்கினேன். உன் மூலமாக என்னை அடையும் வழியை மாந்தருக்குக் காட்டி னேன் ' என்றது கண் காணுத குரல். உயிர் துடிக்கும் அந்தச் சாத்வீகவீரன், அடுத்து ஒரு வேண்டுகொள், என் இதய ரத்தத்தை உன் விரலால் தொட்டு இந்த மாநிலத்தாயின் பாழும் நெற்றியில் அழியாததோர் திலகம் இடு...... இவ்வளவுதான் ’’ என்றதும், சுடர்வட்டம் மறைந்தது. இந்த அஹிம்சையின் சின்னம் லோக ஜனனியின் அம்சமான இந்தியத்தாயின் திருதுதலில் என்றென்றும் ஜொலிக்கும்!