பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம். எஸ். கல்யாணசுந்தரம் சிறை ஸ்த் ஸங்கம் 1981-82-ు வேலூர் சிறைச்சாலையிலிருந்த ஏ-வகுப்பு அரசியல் கைதிகள் அவ்வனுபவத்தை மறக்க முடியாது. அங்கே சுமார் 40 பேர் இருந்தார்கள். ஒருவிதத்தில் பார்த்தால் 40 பேரும் ஒரு அச்சில் வார்க்கப்பட்டவர்கள். தெலுங்கு, தமிழ், மலையாளம், மராட்டி, கன்னடம், செளராஷ்டிரம், துளுவம், கொங்கணி, பிராம்மணர், பிராமணரல்லாதார், ஹிந்து, ஹிந்து அல்லாதார், வக்கீல், வியாபாரி, டாக்டர் என்ற பேதம் இல்லா மல் ஏகமனதுடன் காந்திய முறையில் இந்தியாவுக்குப் பூரண சுயராஜ்யம் கோருபவர்கள் அவர்களனைவரும். ஆனால் தினசரி வாழ்க்கையில் அவர்கள் ஒரு நெல்லிக்காய் மூட்டை-ஒவ்வொரு வரும் ஒரு தனி பிரகிருதி . சற்று மிகைப் படுத்திக் கூறினல், ஸ்நான-பாண-சாப்பாடு பேச்சு வார்த்தை விஷயங்களில் இருவர் மனம் ஒத்திராது. இருவர் தேவை ஒன்றுபட்டிராது; பொறுமை யின்மை, அசூயை நிலவியிருக்கும் எனலாம். அநேகமாய் எல்லாரும் தம்தம் வழியில் நன்ருய்ப் படித்த வர்கள், தீவிரமான தனி அபிப்பிராயங்கள் கொண்டவர்கள். வினேதமான ஆராய்ச்சிகளில் பற்றுள்ளவர்கள் ..முன் காலத்தில் லங்கைத் தீவின் ஒரு அம்சமாக ஆஸ்டிரேலியாக் கண்டம் இருந் தது என்று தக்க சான்றுகளுடன் பருத்த புஸ்தகங்கள் எழுது பவர் ஒருவர் ; பிரிட்டிஷாரின் அசிரத்தை மனப்பான்மை இல்லா விட்டால் கங்கையாற்றின் தண்ணிரைக் கொண்டு வைகை யாற்றை ஜீவநதியாக்கலாம் என்று நிரூபிப்பவர் ஒருவர் : இவ்வாறு பலர். ஆதி பாஷை களைப் பற்றி விவாதம் கிளம்பி விட்டால் ஜெயில் மேலதிகாரிதான் வந்து அமைதி நிறுவ வேண்டும். - - аят ~~4