பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சிறை ஸ்த் ஸங்கம் ஒன்றிரண்டு தலைவர்கள் இவ்வளவு அதிகப்படி சக்தியையும் பயனுள்ளதாக்குவதற்காகப் பலவிதப் படிப்பு வட்டங்கள் உண் டாக்கினர்கள். கீதை, உபநிஷத், குறள், பைபில், குரான், பூரீராமகிருஷ்ண விவேகானந்த உபதேசங்கள் வகையரு, ஹிந்தி யும் அயல் பிராந்தீய பாஷைகளும் ; ஷேக்ஸ்பியர், ஷெல்லி, கீட்ஸ் ; தெய்வ பஜனை, தேசிய பஜனை, உபந்நியாசம், கால rேiபம் ; குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றிய விமர்சனங்கள், விளக்கங்கள், கொள்கைகளைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள், சுயசரித்திரம் முதலியன எழுதுதல் ;-இது போன்ற காரியங் களில் பிற்பகல் நேரம் கழிந்தது. நூற்பு வேலை எல்லாருக்கும் ஏற்பட்ட்து பெரும்பாலோர் திட்டப்படி அரைமணி நேரம் நூற்பார்கள் ; சிலர் மணிக்கணக்கில் நூற்றுக்கொண்டே இருப் LIrrf†&E Gr. r சிலர் மாஜிஸ்டிரேட்டின் தண்டனை வாசகத்தின்படி தமக்கு கடுமையான வேலை கொடுக்க வேண்டுமென்று பிடிவாதம் செய்வார்கள்! சிறை அதிகாரியோ அதை மறுத்து, ! உங்க ளுக்கு வேலை கொடுப்பதற்கு உபகரணங்கள் வேண்டும் : அவற்றை அமைத்து கச்சாப் பொருள் சப்ளே செய்து மேல் பார்வை நடத்த எனக்கு வசதிகள் இல்லை; ஆகையால் ஹாய் யாக சும்மா இருங்கள் ' என்பார். சத்தியாக்கிரகி, "ஒய், நீர் விதியை மீறிலுைம் நான் மீறமாட்டேன் ; எங்கே வேலை?" என்பார், அதிகாரி, கொலை களவு செய்த கைதிகளைச் சமாளிப்பது சுலபமாக இருக்கிறதே ! என்று அலுத்துக்கொண்டு, பல இலாக்காக்களுடன் கலந்தாலோசித்து கஜானப் பைகள் பின் னும் வேலையைக் கொடுப்பார். (அதற்கு ஒரு முளையும் கெட்டி நூலுந்தான் தேவை . ஆனல் செய்து முடித்த பைகளுக்குத் தான் அதிகத் தேவையில்லை : ரூபாய் நாணயம் அதிகமிருந்தால் தானே கஜானப் பைகள் வேண்டும் !) பட்டுப் போன்ற கைக ளுள்ள வக்கீலோ, டாக்டரோ, வியாபாரியோ கொப்புளங்கள் நிறைந்த விரல்களுடன் சோறுகூடப் பிசைய முடியாத நிலையில் தம் கொள்கைகளைக் கொண்டு செலுத்திய ஆத்ம திருப்தியில் மூழ்குவார். ஒரு தலைவர் தாம் தனியாய் இருக்கும் நேரமெல்லாம் நூற் றுக்கணக்கில், ஆயிரக் கணக்கில் காயத்திரி ஜபம். ஜபித்து உலக rேம பாங்கி'யில் டிபாசிட் செய்வார். அவரிடம் இன்னெரு வினேதப் பழக்கம் உண்டு. சிறைச்சாலைத் தோட் டத்தின் பூச்செடிகளை நன்கு பராமரித்து, சாயங்காலம் மல் லிகை முல்லை வகையரு மொட்டுகளைச் சேர்த்து, ராத்திரி விரிக்கப்படும் படுக்கைகளில் தலையணை மீது இரண்டிரண்டு