பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம். எஸ். கல்யாண்சுந்தரம் 5i வைத்து விடுவார். கைதிகள், என்னையா உமது கைங்கரியம் ! இயற்கையாகவே குடும்ப நினைவு வாட்டுகிறது ; குண்டு மல் லிகை போட்டு அத் தீயை வளர்க்கிறீர்களே ! என்று ஆட் சேபிப்பார்கள். அவர் பிரம்மச்சாரிக் கட்டையல்ல, குடும்பப் பாசத்தால் வாட்டப்பட்டவர். சிறை வாழ்க்கையே விரசமானது. அதிலும் சிறைச்சாலை ரெயில் நிலையத்திற்கு அருகாமையில் இருந்துவிட்டால் சொல்ல வேண்டியதில்லை. நடுநிசியில் துரக்கம் கலந்திருக்கும் சமயத்தில் ரெயில் எஞ்சின் ஊதினுல், சுதந்திரம், யதேச்சையான பிரயா ணம், சொந்த வீடு வாசல் போன்றநினைவுகள் மனத்தைக் கசக்கிப் பிழியும். ஏக்கம் வதைக்கும். அந்நிலையில், தலையணை யில் மல்லிகைப்பூ வாசனையும் சேர்ந்து கொண்டால் : ஒரு தியாகி மேற்கூறிய ஒரு வகையிலும் சேராமல் ஒன்றும் இச்சிக்காமல் ஒன்றும் குறை கூருமல், தான் உண்டு, தன் புத்த கங்கள் உண்டு என்று காலம் தள்ளுவார். தபால் மூலமும் அவரைப் பார்க்க வருவோர் மூலமும் கட்டுக் கட்டாகப் புத்தம் புதிய புத்தகங்கள் அவர் அறையில் குவியும். அவை பெரும் பாலும் வறட்டு விஷயங்களைப் பற்றியவை :- உண்மையின் தத்துவம்” சிந்தனையின் விகாசம் ', புள்ளி விவரங்கள்என்ன, ஏன், எங்கே?', எதிர்காலம்-உண்மையா, கற் பனையா?” என்பவை போன்ற தலைப்புக்கள் கொண்டவை. அவருடைய நூல்கள் இரவல் பிரயாணம் சென்று தங்கிவிடும் என்ற பயமே இல்லை. - மற்ருெரு தலைவர் திடீரென்று அரசாங்கப் பொறுப்பு கைக் கெட்டிவிட்டால் அப்பொழுது ஆற அமர ஆலோசிப்பதற்கு அவகாசம் இருக்குமோ இருக்காதோ என்ற கவலையில், காங் கிரஸ் ஆட்சிக்குகந்த தீர்மானங்களும் திட்டங்களும் எழுதிக் கட்டுக்கட்டாகத் தயாரித்துக் கொண்டிருந்தார். எதிர்பார்க் கக்கூடிய ஆட்சேபங்களும் அவர் அளிக்க இருக்கும் சமாதானங் களும்கூட ஆதியிலேயே அவர் அமைதியுடன் ஆலோசித்துக் குறித்து வைத்து விடுவார் என்று சொல்லுவதுண்டு. உண்மை யில் அவை எதிர்பார்த்தபடியே பயனும் பட்டன. டாக்டர் கேசவராவ் அதி சீக்கிரத்தில் எல்லாருக்கும் வேண்டியவராளுர். அவர்கள் அவரைச் சமையல் அறை அதிகாரி யாகத் தேர்ந்தெடுத்தார்கள். சென்னே ஹாஸ்டல் அனுப வத்தை வைத்துக்கொண்டு அவர் ஒவ்வொரு கோஷ்டியாரின் நாப்பழக்கத்திற்கும் தக்கபடி சமையலும் பரிமாறும் திட்டமும் அமைத்தார். ஜெயில் ஆபீஸ்ரின் ஒத்துழைப்புடன் உணவுப் பொருள் குத்தகைக்காரரை வழிக்குக் கொண்டு வந்து அன்ரு