பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 சிறை ஸ்த் ஸங்கம் டம் ஏற்பட்ட தலா எட்டன அலவன்ஸ்ைக் கூடியவரை நல்ல பண்டமாக வாங்க அவர் ஏற்பாடு செய்தார். கைதிகளுக்கும் அப்பளாம், வடாம், ஊறுகாய், பrணங்கள் முதலியன பெற்றுக் கொள்ளும் வசதி இருந்ததினாலும் அநேகமாய் எல்லாரும் தமக்கு வரும் பார்சல்களைப் பிறரோடு பங்கிட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்ததாலும் சாப்பாட்டுப் பிரச்னை திருப்திகரமாகவே தீர்ந்தது. அநேகமாய் வாரத்திற்கொரு விருந்து நடக்கும். புதிதாய் ஒரு நபர் சேரும்போது வரவேற்பு உபசாரம் ; காலமானவர் கள் வெளியேறும்போது பிரிவு உபசாரம் ; பிறந்த நாள் கொண்டாட்டம் , ஊரிலிருந்து மக்கட் பேறு போன்ற நற் செய்தி கிடைத்தாலும் விருந்து. இவ்வாறு ஜெயில் சமையல் அறைக்கு வாதாம், சேமியா, முந்திரிப்பருப்பு, குங்குமப்பூ முதலியவற்றின் வாசனை பருகும் (முன்பின் ஏற்படாத) சுக அனுபவம் அடிக்கடி கிடைக்கும். கடிதங்கள் பெறுதல் உற்ருர் உறவினர் சந்திப்பு, இவை சிறைவாசத்தில் வறண்ட மனங்களையும் மகிழ்விக்கும் நிகழ்ச்சி கள். கேசவராவுக்குக் கடிதங்கள் சுமாராய் ஒழுங்காய் வந்து கொண்டிருந்தன. ஒரு கடிதத்திலிருந்து, பண்டிகைகளின்போது வீட்டில் வழக்கமாய் ஏற்பட்ட எல்லாத் தின்பண்டங்களும் செய்யப்படுவதில்லை, பெயரளவுக்குச் செய்கிரு.ர்கள், என்று அவர் ஊகித்து, தான் எழுதிய பதிலில் சென்ற நான்கு வாரங் களில் சிறையில் நடந்த விருந்துகளின் விவரம், தயாரிக்கப் பட்ட விதவிதமான மிட்டாய்களின் ஜாபிதா எல்லாம் வர்ணித் தார். வீட்டாரனைவரும் சாங்கோபாங்கமான அந்தக் கடிதத் தைப் படித்து, ஐயோ பாவம், கஷ்டப்படுகிருர்கள் 1’ என்று நாம் நினைக்கிருேம். பயல்கள் அங்கே கும்மாளமடிக்கிருர்கள் என்று சொல்லிச் சிரித்தனர். அதன் பிறகு அவர்களுக்கும் வாழ்க்கை சற்று சகிக்கக்கூடியதாக இருந்தது. இவ்வாறு நாட்கள் கழிந்தன. ஒவ்வொருவரும் தம்தம் விடுதலைத் தேதியை-நன்னடத்தைக்கான போனஸ் போககணக்கிட்டுக் கொண்டிருந்தனர். அநேகர் சட்ட மறுப்பு நடத்தி மறுபடி மறுபடி சிறை திரும்பத் தீர்மானித்தவர்கள். இருந்த போதிலும் விடுதலை என்பது பிரியமாகத்தானிருந்தது. இதற்கிடையே எதிர்பாராத, வெளியிடமுடியாத சில காரி யங்களின் தொடர்பாக, கடிதப் போக்குவரத்து, பேட்டி சந்திப்பு என்னும் வசதிகளை இக் கைதிகள் தியாகம் செய்து விட்டனர். அப்பெரிய நஷ்டத்தின் காரணமாக வாழ்க்கை இருள் மூடியிருந்தது. சாப்பாட்டிற்குப் பிறகு கடிதங்களுக்காக