பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

γ: தாலேயே, தமிழ்நாடு விடுதலைப் போரில் தன் பங்கைச் செய்யத் தயாராக முன் வந்தது என்று கூறினல் மிகையாகாது. . தேசீயம் என்பது 1920-ம் ஆண்டிலிருந்து காந்தி யத்தின் வழியில் மலரத் தொடங்கியது. வெளி நாட்டு ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமானுல் அதற் கான சக்தி நம் நாட்டு மக்களின் மனவளர்ச்சி யிலும், அறிவு வளர்ச்சியிலும், நேர்மைத் திறனிலும், ஒற்றுமையிலும், உழைப்பிலும் தான் இருக்கிறது எனக் கண்டு கொண்டார் காந்திஜி. எப்படி எல்லாம் அவர், மண்புழுக்களாக நெளிந்த நம்மை மனிதர்களாக்கி, நமக்கு விடுதலை தேடித் தந்தார் என்பதை நாம் அறிந்து கொள்வதற்கு இந்தச் சிறு கதைத் தொகுதியிலுள்ள கதைகள் நன்கு உதவி புரிகின்றன. அந்தக் காலத்திலேயே காந்திஜியின் கொள்கைகளை நாட்டில் பரப்பிய சிறு கதைகளும் இதில் வெளி வந்திருக்கின்றன. இந்தக் காலத்தில் அவற்றைப் பரப்பி வரும் கதைகளும் இதில் உள்ளன. கல்கி மதுவிலக்கை மையக் கருத்தாக வைத்து எழுதிய கதை தெய்வயானை கள்ளுக் கடையில் திடீரெனப் பொருள் குவித்துப் பெரும் பணக்காரரான ஒருவர் கடைசியில் இப்படிச் சொல்வதை நாம் கதை யில் காணுகின்ருேம் : 'ஒரு வாரத்துக்குள்.கள்ளு. சாராயக் கடை கிளைத் தொலைத்துத் தலைமூழ்கினேன். அக் கடைகளில் சம்பாதித்த சொத்தை யெல்லாம் அந்த ஊர்க் கோயிலுக்கும், பஜனை மடத்திற் கும், பள்ளிக்கூடத்திற்குமாக எழுதி வைத் தேன். ...கையில் கொஞ்ச ரூபாய் எடுத்துக் கொண்டு தாயாரும் நானும் சென்னை நகருக்கு வந்து சேர்ந்தோம். ’. இவ்வாறே மதுவலககைபபற்ற வி. எஸ். சுப்பையா, நாக சண்முகம், நாரண துரைக்கண்ணன், பெ. தூரன் ஸோமாஸ், முதலிய எழுத்தாளர்களும் பல்வேறு