பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம். எஸ். கல்யாணசுந்தரம் 53 ஜெயில் காரியாலயத்திற்குச் செல்லும் இனிய உற்சவம் நின்று போயிற்று. ஆகவே விடுதலை தினம் மிகமிக விரும்பத்தக்க நாளாயிற்று. இத்தியாகத்தையொட்டி நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. ஜெயில் அதிகாரி சாதாரணமாகக் கைதி களின் கடிதங்கள் எல்லாவற்றையும் பரிசீலனை செய்ய வேண் டும். சாதாரண நாட்களில் அது சிரமமான காரியமல்ல : கடிதங்கள் அபூர்வமாகத்தான் வரும். ஆனல் படித்த, பல தொடர்புகள் கொண்ட அரசியல் கைதிகள் மந்தை மந்தை யாக வந்து குவியும்போது அது சாத்தியமில்லாத காரியமா யிற்று. அதற்காகவே இரண்டு மூன்று அந்தரங்கக் குமாஸ்தாக் கள் வேண்டும். ஆகவே, அதிகாரி எது குடும்பக் கடிதம், எது அரசியல் சம்பந்தமானது என்று முகர்ந்து பார்த்து , தனி யாகப் பிரித்து, முக்கியமானது மாத்திரம் படித்துத் தணிக்கை செய்வார். மனைவிமார் எழுதும் கடிதங்களுக்கு அவர் 'கண்ணே மூக்கே 1 என்ற அர்த்தத்தில், ஆங்கிலத்தில், ஐஸ் நோஸ் லெட்டர்ஸ்’ என்று பெயரிட்டிருந்தார்! ஆல்ை ஒருநாள் வக்கீல் ஒருவருக்கு வந்த குடும்பக் கடிதம் ஆங்கிலத்தில் டைப் அடிக்கப்பட்டிருந்தது. அதிகாரியின் கண் அதன்மேல் சற்று தங்கிற்று. பிறகு விஷயத்தை முழுவதும் படித்தார். வக்கீல் தொழில் பார்க்கும் அத்தலைவருக்கு அவ ருடைய குமாஸ்தா எழுதியதாவது : ' ...சென்ற இரண்டு மூன்று கடிதங்களுக்கு அவ்விடத்திலிருந்து பதில் வராததால் தங்கள் மனைவி மிகவும் திகில் அடைகிரு.ர்கள். தங்கள் தேக நிலை எப்படி இருக்கிறது? முறைப்படி வைத்தியம் நடக்கிறதா? அம்மா அவர்களுக்கு இங்கே இருப்புக் கொள்ளவில்லை. நாளை ரெயிலில் புறப்பட்டு நான் அவரை அங்கு அழைத்து வருகி றேன். கைக் குழந்தையையும் கொண்டு வருகிருேம். தாங்கள் அவருக்குத் தக்க ஆறுதலளிக்கவேண்டும்...” அதிகாரி கைதியை அழைத்துக் கடிதத்தைக் கையில் கொடுத்தார். கைதி அதைப் பெற்றுக்கொள்ள மறுத்தார். அதிகாரி தனக்குத் தெரிந்த தர்க்கமெல்லாம் பிரயோகித்தார். பயனில்லை. பிறகு அவர் கடிதத்திலுள்ள செய்தியைத் தெரி வித்தார். கைக் குழந்தை வக்கீலின் சிறைவாசத்தின் மத்தியில் ஆறுமாதங்களுக்கு முன் பிறந்தது. கைதி துக்கமும் உணர்ச்சி யும் உருவெடுத்து, நீங்கள் அதைப் படித்துக் காட்டியிருக்கக் கூடாது. என்னைப் பொய் நடத்தைக்காரகை ஆக்கிவிட்டீர் கள். என் மனைவியை நான் வரவேற்றுப் பேசுவது சாத்திய மில்லை’ என்று மிக்க சிரமத்தின் பேரில் கூறினர்.