பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சிறை ஸ்த் ஸங்கம் அதிகாரி, அப்படியானுல் வரவேண்டாம் என்று அவருக் குத் தந்தியடித்து விடுங்கள் ' என்ருர்: அந்த உரிமைதான் எனக்கு இப்பொழுது இல்லையே’ என்று தெளிவுப்படுத்தினர் வக்கீல். ' என்ன கல் நெஞ்சு 1 முன்னுக்கும் போகாமல் பின்னுக் கும் போகாமல்...அப்படியானல் என் சொந்த ஹோதாவில் நான் தந்தியடிக்கிறேன், ' என்ருர் அதிகாரி. அதை எனக்குத் தெரிவிப்பதும் என்னைப் பொறுத்தவரை தர்மசங்கடமான விஷயம்தான். சரி-என்று ஒப்புக்கொள்வ தாக இருந்தால் நானே அடித்துவிடலாமே ! என்று தர்க்கித் தார் கைதி. பொறுமையிழந்த அதிகாரி, சரி நீர் போம்-நீரும் உம் சத்தியமும் நியாயமும் வக்கீல் பேச்சும் ! எதற்கும் ஒரு எல்லை வேண்டும் ' என்று அவரைக் கண்டித்து அனுப்பிவிட்டு வக்கீ லின் குமாஸ்தாவுக்கு ' தற்சமயம் புறப்பட வேண்டாம் ' என்று தந்தியடித்தார். எக்காரணத்தாலோ அவர்கள் மறுநாள் வந்து சேர்ந்து விட்டார்கள். நடந்த விஷயங்களே அறிந்து அந்தம் மாள் கைகால் தளர்ந்து அப்படியே உட்கார்ந்துவிட்டார். அதிகாரி தமக்கு யோசனையளிப்பதற்காகத் தம் மனைவியை வரவழைத்தார். அவர் நன்ருய்ப் படித்தவர், நல்ல குடும்பத் தைச் சேர்ந்தவர். எல்லா விவரமும் அறிந்து கொண்டபின் அவர் வக்கீலின் அறைக்குச் சென்று, 'ஐயா, எந்த அபிப்பிரா யத்திற்கும் மறுபுறம் உண்டு. எந்த விரதத்திற்கும் விலக் குண்டு. அதுவுமில்லாமல் நீர் பீஷ்மப் பிரதிக்ஞை என்று நினைப்பதை உலகம் அசுரப் பிடிவாதம், மமதையின் அழுத்தம் என்று கருதலாம். உம் சகாக்கள் எல்லோரும், உம் மாகாணத் தலைவர் உள்பட, நீர் உம் மனைவியைக் கண்டு பேசி ஆறுதல் கூறவேண்டும் என்று ஒப்புக்கொள்கிரு.ர்கள். பஹாஜன வாக் குக்கு மதிப்புத் தரவேண்டும். ஸ்திரி, அதிலும் தேகநிலை சரியாய் இல்லாதவள், என்ருல் யாரும் மனம் இரங்குவார்கள், தபஸ்விகளும் இரங்குவார்கள், பேயும் இரங்கும். இது உம் சொந்த விஷயமாக இல்லாததால் இதே யோசனைதான் நீங்க களும் கூறுவீர்கள். ஐயா, தயவு செய்து வாரும் ' என்று அழைத்தார். - வக்கீல் தலை நிமிராமல் கண்ணிர் வடித்துக்கொண்டிருந் தார். அவர் உடல் குளிர் காய்ச்சல் வந்தாற்போல் நடுங்கிக் கொண்டிருந்தது. பிறகு சூபரிண்டன்டெண்டு ஒரு வார்டரை