பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம். எஸ்; கல்யாணசுந்தரம் 55 அனுப்பி அவரை ஆபீசுக்கு வரும்படி உத்தியோக முறையில் கட்டளையிட்டார். அங்கு சென்றபின் வக்கீல் தலை நிமிராமல் கீதையில் ஸ்திதப் பிரக்ஞன வர்ணிக்கும் சுலோகங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தார். அதிகாரி, அக்கிரமம், பிடிவாதம், அளவு கடந்த அகம்பாவம்' என்று ஆங்கிலத்தில் அலுத்துக்கொண்டு, "பேட்டி முடிவடைந்தது; கலையலாம்' என்று கூறிவிட்டார். இந்தச் சோதனையின் அதிர்ச்சியால் வக்கீலுக்கு இரண்டு மூன்று நாட்கள் ரத்த அழுத்தமும் மற்ற உபத்திரவங்களும் இருந்தன. கேசவராவும் ஜெயில் டாக்டரும் கவனித்து வந் தார்கள். சந்தர்ப்பம் வாய்த்ததும் ராவ், 'ஏன் சார், ஆதியி லிருந்தே நீங்கள் இந்த சலுகைத் தியாகத்தை எதிர்த்தீர்களே! இந்த வம்புக்குக் காரணமாயிருந்த நிகழ்ச்சிகளில் முதல் தப்பு நம்முள் ஒருவருடையது. அதைப் பகிரங்கமாய் ஒப்புக்கொண்டு சர்க்காரிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்கிறீர்களே. ஆகையால் உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் உங்கள் மனைவியிடம் பேசியிருக்கலாமே ' என்ற சந்தேகத்தைக் கிளப் பினர். அதற்கு வக்கீல், 'தர்மத்தின் மார்க்கம் மிகவும் சூrம மானது, மிஸ்டர் ராவ். வாள் முனை போன்றது என்பார்கள். நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இந்தத் துக்ககரமான நிலைமைக்கு நம்முள் ஒருவர்தான் காரணம், அதை நாம் அறி வோம். ஆனல் அதை மறைத்து வைத்து, பிற்கால நடத்தைக் கான ஒரு முடிவுக்கு வந்தபின், கசப்போ இனிப்போ, அந்த முடிவுப்படி தான் நாம் நடக்கவேண்டும். செளகரியப்பட்ட போது கூட்டத்தாரின் தீர்மானம், அது அசெளகரியமானல் என் சொந்த தீர்மானம் என்று மாறி மாறி நடக்கக் கூடாது. மொத்தத்தில் இது தர்மசங்கடமான நிலைகளில், சுகமான பாதையைக் காட்டிலும் கடினமான பாதையே சரியான மார்க்கமாகும் என்று நாம் வைத்துக் கொள்ளலாம். உங்களுக் குத் தெரியாததல்ல, கேட்டதினால் சொல்கிறேன்,' என்று பலஹீனத்துடன் விடையளித்தார்;