பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** LOITuJIT6%, o அஞ்சலி ல்ெ"லைமாவின் தளிர் உடல் ஆடிக்காற்றில் அலைந்தாடும் பசுந்தளிரைப் போல் படபடத்தது. யா அல்லா நீங்கள் அங் கெல்லாம் போகவே கூடாது' என்று அலறிள்ை அவள். அமீருக்கு மனைவியின் பதற்றம் ஆச்சரியத்தை அளித்தது. அவன் அவளை அருகில் இழுத்து அணைத்துக்கொண்டு, பர்தா வுக்கு மேலாக அவளுடைய தலையை அன்புடன் வருடியவாறு, 'ஏன் ஸ்லே, ஏன் இந்தப் பதற்றம் ?' என்று கேட்டான். ஏன ? இந்த நெஞ்சைக் கேட்டுப் பாருங்கள். ஸ்-லைமா தாமரைத் தண்டு போன்ற தனது நீண்ட சுட்டுவிரலை அவன் நெஞ்சில் பதித்தாள். - - அமீர் சிரித்தான். இப்பொழுது அவனுக்கு மனைவியின் பதற்றத்தின் காரணம் விளங்கிவிட்டது. ஆம், அவளைப் போன்ற நிலையிலுள்ள எந்தப் பெண்ணும், கணவனே அந்த இடத்துக்கு அனுப்ப அஞ்சத்தானே செய்வாள்? ஆகையால் அவ்ன் தன் நெஞ் சில் பதித்திருந்த விரலோடு ஸுலைமாவின் கண்ணுடி வளையல் குலுங்கிய அழகிய கரத்தை ஆசையோடு பற்றிக் கொண்டு, ' பைத்தியமே! இந்தக் கையை என்றைக்குப் பற்றினேனே. அன்று தொட்டு நீதான் என் உடல், பொருள், ஆவியெல்லாம் என்பது உனக்குத் தெரியாதா ? ஏதோ அல்லாவின் திருவருளால் இனி என்ளுைமே போக முடியாது என்றிருந்த அந்த இடத்துக் குப் போகும் வாய்ப்பு ஒன்று வலியக் கிட்டியிருக்கிறது. போய் வாருங்கள் என்று மகிழ்ச்சியுடன் விடை தந்து அனுப்ப வேண்டிய நீ, ஏதேதோ கற்பனைகள் செய்து கொண்டு வீணில் மனசைக் கலக் கிக் கொள்ளுகிருயே! ' என்று அவளைத் தேற்ற முயன்ருன்.