பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயாவி 57 ஸ்லேமாவின் மனத்தில் எழுந்த பீதி கணவனின் ஆறுதல் மொழிகளால் மாறிவிடவில்லை. அவள் சொன்னாள் : ' என் உள்ளம் கலங்கத்தான் கலங்குகிறது, அமீர். நீங்கள் இந்த உலகத்தில் வேறு எந்தப் பகுதிக்குப் போவதாக இருந்தாலும் சந்தோஷமாக விடை தந்து அனுப்பி விடுவேன். ஆனல் இங்கு மட்டும்...... அவளால் மேலே பேசமுடியவில்லை. நெஞ்சத்தின் கலக்கம் கல்லாக உருண்டு தொண்டையை அடைத்தது. அந்த அடைப்பு அவளுடைய கவர்ச்சிமிக்க மைதீட்டிய கருவிழிகளில் கண்ணிரை ஊற்றெடுத்து ஓடச் செய்தது. அமீர் மீண்டும் அவளை அருகில் இழுத்து அவளுடைய வாடிய முகத்தைத் தன் அகன்ற மார்பின்மீது சாய்த்துக் கொண்டான். அடடா ! இது என்ன ஸ்-லே? ஏன் இப்படிக் கண்ணிர் விடுகி முய்? உன் கண்ணிரைப் போக்கக் கைப்பிடித்த நான், உன்னைக் கண்ணிர் சோர விட்டுவிட்டு எங்கும் போகமாட்டேன். நீ போக வேண்டாம் என்ருல் போகவில்லை கண்ணே அதற்காக அழாதே, ஏதோ ஒரு சபலம் : ஆபீசிலிருந்து அனுப்புவதாகச் சொல்லு கிருர்களே ! நமது நன்றிக் கடனும் நீண்ட காலமாக நிறைவேற். றப்படாமல் இருக்கிறதே ; போய் வந்துவிடாலாமென்று நினைத் தேன். ' ஸ்ாலைமா கேவிக்கொண்டே அவனை இடைமறித்தாள் : ஆமாம்; எல்லோரும் இப்படித்தான் ஏதேதோ காரணத்தைச் சொல்லிக்கொண்டு, இதோ வந்து விடுகிறேன்' என்று போகி ருர்கள். ஆளுல் போனவர்கள் திரும்பிவருவதே இல்லை ; பிறந்த மண் அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு விடுகிறது. ’’ ஆனல் என்னைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கும் காந்த மாகிய நீ இங்கே இருக்கையில் என் உடல்தான் அங்கே போய் வருமேயன்றி உயிர் இங்கேதான் இருக்கும் ஸ்லே. ’’ ஸ்ாலைமாவிடமிருந்து நெடுமூச்சு ஒன்று பிரிந்தது. இப்ப டிச் சொல்லிவிட்டுத்தான் ஆறு மாதத்துக் கைகுழந்தையைக்கூட விட்டுவிட்டுப் போளுள் தாரா. அவள் திரும்பிவந்தாளா? திரும்பி வர முடிந்ததா அவளால் ? ’’ - அவள் பெண். தவிர பெற்ருேரும் அங்கே இருந்தனர். ஆனல் என் விஷயம் அப்படியில்லையே. எனக்கு அங்கே யார் இருக்கிரு.ர்கள்? ' - ஸ்-லைமாவுக்கு இன்னும் கணவனின் பேச்சில் நம்பிக்கை பிறக்கவில்லை. அவள் சொன்னாள்: ‘' எப்படியிருந்தாலும் உங்களை நான் அனுப்ப உடன்படவே மாட்டேன் அமீர். ஆபீஸில் வாக்களித்துவிட்டதற்காகப் போய்த்தான் ஆகவேண்டுமென்ருல், என்னேயும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள், !