பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அஞ்சலி மனைவி தன் பிரயாணத்தின் நோக்கத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதை அமீர் இப்பொழுதுதான் உணர்ந்து கொண்டான். சே! இந்தப் பெண்கள்தான் எவ்வளவு சீக்கிரம் நன்றி மறந்தவர்கள் ஆகிவிடுகிரு.ர்கள் ! அன்று அந்தத் தாராவும் இப்படித்தான் நன்றி மறந்தவள் ஆளுள். இன்று இவளும். . . . அவன் ஒருகணம் மனைவியின் நெஞ்சைத் துளைத்து விடும்படி யாக ஒரு பார்வையைச் செலுத்திவிட்டுச் சொன்னன் : நான் இந்தப் பிரயாணத்தை மேற்கொண்டிருப்பதன் நோக்கத்தை நீ புரிந்துகொண்டிருப்பாய் என்று நினைத்தேன் ஸ்லே. ஆனல் நீ அதை இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. என் அன்புள்ள ஸ்-லே நான் இப்பொழுது அங்கே போவது ஆபீஸ் கட்டளையை நிறைவேற்றவோ, அல்லது பிறந்த மண்ணைக் காணவேண்டியோ அல்ல ; நம்மை ஆளாக்கி வாழ்வளித்த மாந்தர்குல மாணிக்கத் திற்கு அஞ்சலி செலுத்தத்தான் போகிறேன். ' அஞ்சலி ! கட்டுக்கடங்காமல் படமெடுத்துக் கொட்டவந்த பாம்பு, பிடாரன் கையில் வேர்ப்பையை எடுத்ததுமே கொட்ட மடங்கித் தலை சாய்த்து விடுவதுபோல், தலைகுனிந்தாள் ஸ்-லைமா; யா அல்லா ! எனக்கு அது தோன்றவே இல்லையே? போய் வாருங்கள் அமீர்; தாராளமாய்ப் போய் வாருங்கள். லாகூருக்குப் போய் அந்தப் புண்ணியாத்மாவின் தர்கா"வின் முன் மண்டியிட்டு அஞ்சலி செலுத்துவதோடு, இந்த அபலையின் அஞ்சலியையும் அவருக்குச் செலுத்துங்கள் ; பிறகு அங்கிருந்து அதிக தூரம் இல்லை ஷேக்குப்புரா , அங்கே போய், அந்த நன்றி கெட்ட தாராவைச் சந்தித்து அவள் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டும் வாருங்கள் ' என்ருள் அவள் இறுதியாக: தாண்டமுடியாத கோட்டையாய், தகர்க்க முடியாத கற் சுவராய், கணவனின் பிரயாணத்துக்குத் தடைபோட்ட ஸ்-லைமாவை ஒரு கணத்துக்குள் தாழிடப்படாத கதவாகமாற்றி, தாராளமாகத் திறந்து வழிவிடச் செய்துவிட்டது அந்த அஞ்சலி என்ற மந்திரச்சொல். அதன் மகத்துவம் தான் என்ன? அத னுள்ளே அடங்கியிருந்த மர்மந்தான் என்ன? எந்த மனிதருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டுச் சொந்தக் கணவன் தன்னைப் புறக்கணித்துப் பிறந்த இடத்தில் தங்கிவிட்டாலும் பரவாயில்லை: அவரை அனுப்பித்தான். ஆகவேண்டும்:என்று அவள் துணிவு கொண்டாள். இந்த விவரங்களையெல்லாம் தெரிந்து கொள்ளு முன்,ஏன் அவள் இதோ இருக்கும் லாகூருக்குக் கணவனை அனுப்ப இத்தனை பெரிய தடை போட்டாள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ‘.