பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

шотштsol 59 அதற்கு முதல்காரணம் இதுதான் ; ; n-லைமாவின் கணவன் அமீர்கான் லாகூரில் பிறந்தவன். இந்தியா பிளவடைவதற்கு முன் அமிர்தசரஸ்ஸில் இருந்த அவன், பின்னர் தான் பிறந்து வளர்ந்த ஊராகிய லாகூர், பாகிஸ்தானுக்குப் போய்விட்டபடியா லும், அப்பொழுது ஏற்பட்ட கலவரங்களில் தன் பெற்ருேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று அறிந்தமையாலும் இந்தியாவி லேயே தங்கிவிட்டான். இதுகூடப் பெரிதல்ல; ஆனல் அமீரைப் போல் பாகிஸ்தானில் பிறந்து, நிர்ப்பந்தம் காரணமாக இந்தியப் பிரஜையான பலர், பின்னர் எப்பொழுதாவது பிறந்த பூமிக்குச் சென்ருல், அந்த மண்ணின் மணம் அவர்களைக்கவர்ந்து அங்கேயே தங்கிவிடச் செய்ததைக் கண்கூடாகக் கண்டிருந்ததால்தான், ஸ்-லேமா தன் கணவரும் அப்படிச் செய்துவிடுவாரோ என்று அச்சமுற்ருள். அடுத்த காரணம், அப்படி அவர் பிறந்த பூமியில் தங்கி விட்டால், தன்னை இங்கே ஆதரிக்கயாருமில்லை என்பதும், தனக் குத் தான்பிறந்த சமூகத்தில்கூட இனி இடம் கிடையாது என்பது மாகும். ஆம் அவளுடைய கதையே ஒரு சோகக் கதை; ஒரு விந்தைக் கதை. இன்று அவள் உயிர் வாழ்கிருள் ; காதல்மிக்க கணவனுடன் கருத்தொருமித்து இல்லறம் நடத்துகிருளென்ருல், இந்த வாழ் வையும், இந்த இல்லறத்தையும் அவளுக்குக் கிடைக்கச் செய்த வன்தான், அவளும் அமீரும் இன்று அஞ்சலிசெலுத்த விரும்பிய கேஸர் ஸிங், கேலர் ஸிங்கின் கதையைக்கூற வரும்போது அதைக் காதல் காவியம் என்பதா அல்லது கவினுறும் தியாகச்சித்திரம் என்பதா என்ற ஐயம் ஏற்படுகிறது. ஏனெனில் இந்த இரண்டுமே அவனு டைய வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருந்தன. ஆயினும் இன் றைய உலகம், கேஸர் ஸிங்கின் தியாகத்தைக் காதலோடு முடிச் சிட்டு அவனுடைய வரலாற்றிற்குக் காதல் மகுடமே சூட்டியிருப் பதால் நாமும் அந்தக் கண் கொண்டே அவன் கதையைப் பார்ப் போம். இந்த உலகிலே உண்மைக் காதலுக்காக உயிர்நீத்த உத்தமர் கள் எத்தனையோ பேர். நம் நாட்டில் ஒர் அம்பிகாபதி, மேலை நாட்டில் ஒரு ரோமியோ: அராபிய நாட்டில் ஒரு மஜ்னு. இன்னும் இப்படி எந்த நாட்டுச் சரித்திர ஏட்டைப் புரட்டினலும் இவர்களைப் போன்ற எத்தனையோ காதல் தியாகிகளைக் காண லாம். அவ்வாறே இன்றைய பாரதநாட்டின் சரித்திரம் ஒன்று வருங்காலத்தில் வரையப்படும்போது, அதில் காதல் பகுதிக்கு