பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அஞ்சலி மகுடமிடும் ஒவியமாகத் தீட்டப்பட்டிருப்பான் கேலர் விங் என் பதில் சிறிதும் ஐயமில்லை. கேஸர் ஸிங் என்ற பெயரே அவன் சீக்கியன் என்பதை விளக் கப் போதும்; ஆனல், அவன் ஓர் உண்மையான சீக்கியன் என் பதை விளக்க ? அதற்கு அவன் கதையைத் தன் ரத்தத்தினலே தான் எழுத நேர்ந்தது; கேலர் ஸிங் சீக்கிய மதக் கோட்டையான பொற்கோவில் நகரம் அமிர்தசரஸ்ஸில் பிறந்தவன். செல்வச் சிறப்புள்ள குடும் பத்தின் ஒரே வாரிசு. அவனுடைய தந்தை பல்பீர் ஸிங் ஒரு தீவிர மதவாதி. சீக்கிய மத நூலான கிரந்த ஸாஹிப் பைக் கரைத்துக் குடித்தவர்; ஆயினும் அதன் சாரத்தை வாழ்வில் கொள்ளாதவர். பாரத நாட்டின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சீக்கியமதம், மதத்தைக் காக்கத் தோன்றிய மதந் தான். இருந்தாலும் அது போதித்த அன்பையும். பரோபகாரத் தையும் உணராத சிலரும் அம்மதத்தில் இருந்தனர். இடுப்பிலே கிரீ' பானும், கரத்திலே இரும்பு வளையமும். உடலிலே பிறந் தது முதல் ஒரு தடவைகூட உதிர்க்கப்படாத ரோமமும் கொண்ட சீக்கியர்கள் மதப்பற்று மிக்கவர்கள் என்பது பிரசித்தம், ஆனால், அந்த மதப்பற்று பல்பீர் ஸிங்கைப் போன்ற சிலரிடம் மதவெறி யாக மாறியிருந்ததென்ருல், அதற்கு அந்த மதம் காரணமல்ல : அவர்களுடைய மனந்தான் காரணம்; உன் மதத்தையும், மானத்தையும் காக்க உயிரையும் கொடு என்று கிரந்த ஸா ஹிப் பில் குறிப்பிட்டிருக்கும் போதனையின் உண்மைப் பொருளை அவர்கள் உணராததே காரணம். ஆம் ; மதத்துக் கும் மானத்துக்கும் அழிவு ஏற்படும்போல் இருந்தால் உயிரைக் கொடுத்தாவது அந்த இரண்டையும் காப்பாற்று என்று அது கூறியதை அவர்கள் வேறு விதமாக அர்த்தம் செய்து கொண்டார் கள். ஆதிகாலத்தில் முகமதியர்களின் கொடுமைக்கும், அட்டூழி யத்துக்கும் ஆளாகியிருந்த காரணத்தால், தங்கள் மதத்தை அழிக்கத் தோன்றியிருப்பவர்களே முகமதியர்கள் என்று அவர் கள் மீது அடங்காத் துவேஷம் கொண்டார்கள் இந்தத் தீவிர மதாபிமானிகள். இதன் காரணமாக எங்கெங்கு எப்படி எப்படி யெல்லாம் முடியுமோ அப்படி அப்படியெல்லாம் முகமதியர் களுக்குத் தீங்கு விளைவிப்பதை மதத்தின் பெயரால் தங்கள் கடமை யாகக் கொண்டார்கள். இதனுல் விளைந்ததுதான் பெரும்பாலான சீக்கிய-முகமதியச் சண்டைகள், ரகளைகள், கலகங்கள் எல்லாம். இத்தகைய மனப்பாங்கு உடையவர்தான் பல்பீர் ஸிங். சைவ உணவுக்காரர்களுக்கு எப்படி மாமிச உணவின் வாடையே அரு வருப்பைத் தருமோ. அப்படித்தான் பல்பீர் ஸிங்குக்கும், முகமதி யர்களின் வாசனையே உதவாது, -