பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயாவி Ꭶ ? ஆனல் இதற்கு நேர் எதிராக இருந்தான் அவருடைய மகன் கேஸர் ஸிங். அவனுக்குத் தன் தந்தையைப் போன்ற சிலர், காரணமின்றி முஸ்லீம்களே வெறுப்பதும், அவர்களுக்குத் தீங் கிழைப்பதும் கட்டோடு பிடிக்கவில்லை. ஆனால், மகன் தந்தை யைத் திருத்த முடியுமா? ஆகையால், தந்தை எப்படி யிருந்தா லும் தன்னைப் பொறுத்தவரை எம்மதமும் சம்மதமாக வாழ்வது : தன் மதத்தவரால் பகைமை பாராட்டப்படும் முஸ்லிம்களுக்கு இயன்றவரை உதவுவது என்று அவன் உறுதி பூண்டான். சிறு பிராயத்திலிருந்தே ஊறி வந்த இந்த மனப்பாங்கு கேலர் ஸிங் வளர வளர அவனிடம் வளர்ந்து வந்தது, இந்த மாறுபட்ட மனப்போக்கு காரணமாகப் பிற்காலத்தில் தந்தைக்கும், மகனுக் கும் இடையே பெரும் பிளவு ஏற்பட்டிருந்தாலும், ஏற்பட்டிருக் கக்கூடும். ஆனல் அதைத் தெய்வச் செயல் என்றுதான் சொல்ல வேண்டும் கேலர் ஸிங் பத்தாவது படித்து முடித்ததும் பல்பீர் விங் காலமாகிவிட்டார். தந்தை இறந்ததுமே தான் ஓர் உண்மை சீக்கியன் என்பதை அவன் வெளிப்படையாகச் செயல் மூலம் காட்ட ஆரம்பித்துவிட்டான்: கேலர் லிங் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் பொற் கோயிலுக்குப் பிரார்த்தனைக்காகச் செல்வதுண்டு. ஒரு நாள் மாலையில் அவன் அவ்வாறு பிரார்த்தனைக்குச் சென்றபோது கோயிலின் முன் பெருங்கூட்டமாக மக்கள் கூடி நின்றதைக் கண் டான். அருகில் சென்று விசாரித்தபோது யாரோ ஒரு முஸ்லிம் இளைஞன் கோயிலுக்குள்ளே புகுந்துவிட்டானென்றும், அவனை வெளியேற்றி அடித்துக் கொண்டிருக்கிருர்கள்என்றும் அறிந்தான். மறு நிமிஷம் அவன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே பாய்ந்தான். அங்கே சுமார் இருபது வயது மதிக்கத்தக்க முஸ்லிம் இளைஞன் ஒருவனைப் பல சீக்கியர்கள் தாக்கிக் கொண்டிருந்தனர். அவனுடைய ஆடைகள் அலங்கோலமாகக் கிழிக்கப்பட்டிருந்தன. உடலில் பல இடங்களிலிருந்து உதிரம் கொட்டிக்கொண்டிருந்தது. இந்தக் காட்சி கேஸர் ஸிங்கின் கண்களில் கண்ணிர் பெருக் கெடுக்கச் செய்தது. அந்த இளைஞனே அடித்துக் கொண்டிருந் தவர்களை அவன் வெறியோடு அப்பால் பிடித்துத் தள்ளின்ை. பிறகு முகத்திலே அனல் பரக்க நீங்கள் மனிதர்களா ? காட்டு மிராண்டிகளா ? எதற்காக இப்படி ஓர் அந்நியன அடிக்கிறீர்கள்? அப்படி அவன் என்ன தவறு செய்துவிட்டான் ? நம் கோயிலில் அவன் நுழைந்து விட்டதால் என்ன கெட்டுப் போய்விட்டது ? அங்கிருக்கும் தெய்வம் ஓடிப் போய்விட்டதா? பொற்கே "யில் பித்தளைக் கோயிலாக மாறிவிட்டதா? இதுதான் நமது புனித சீக்கிய மதம் போதிக்கும் நீதியா ?' என்று பலவாறு கண்டித்துப் பேசிவிட்டு, அந்த இளைஞனே எழுப்பித் தன்வீட்டுக்கு அழைத்துச் சென்றன். அவனுடைய காயங்களுக்கு மருந்திட்டு அவனுக்கு