பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அஞ்சலி வேறு உடையும், உண்ண உணவும் அளித்து, அவன் யார், எந்த ஊர் என்ற விவரங்களை விசாரித்தான்; இன்று ஸுலைமாவின் கணவனுக விளங்கும் அமீர்கான்தான் அந்த இளைஞன். சொந்த ஊரில் பத்தாவது வரையில் படித்த பிறகு அவன் டில்லிக்குச் சென்று ஏதாவது வேலே தேடிக்கொள்ள லாமென்று புறப்பட்டான். அவனுக்கு நெடுங்காலமாகவே அமிர்தசரஸ்ஸிலுள்ள உலகப் புகழ்பெற்ற பொற்கோயிலைக் காண வேண்டுமென்று ஆசை. ஆகையால் லாகூரை விட்டுக் கிளம்பிய அவன் முதலில் அமிர்தசரஸ்ள)-க்குச் சென்றுவிட்டுப் பிறகு டில்லிக்குப் போகலாமென்று இங்கே வந்தான். அந்தக் கோயிலின் பிரும்மாண்டமான அமைப்பிலும், அதன் பொன்னலான கோபுரத்தின் பேரொளியிலும் மனசைப் பறிகொடுத்து விட்ட அவன், தான் ஒரு முஸ்லிம் என்பதையே மறந்து மளமளவென்று உள்ளே வந்துவிட்டான். முஸ்லிம்களைக் காணவே சகிக்காதவர் களுக்கு அவர்களில் ஒருவன் தங்கள் கோயிலுக்குள்ளே வந்து விட்டால் ஆத்திரம் ஏற்படக் கேட்கவா வேண்டும்? அன்று கேலர் விங் மாத்திரம் தக்க சமயத்தில் வந்து காப்பாற்றியிராவிட்டால், அமீர் அல்லாவின் திருவடி நிழலை அடைந்திருப்பான். அமீரின் காயங்கள் ஆறும் வரை அவனைத் தன்னுடன் வைத்திருந்து, பின்னர் அவனே டில்லிக்கு அனுப்பிவிடலாமென்று தான் கேலர் ஸிங் நினைத்திருந்தான். ஆனல் அந்தத் தீர்மானத் தை உடனே மாற்றிக்கொள்ளும்படி செய்து விட்டார்கள் அமிர்த சரஸ்ஸிலிருந்த சில தீவிர மதாபிமானிகள். அன்றிரவு அவர் களில் சிலர் கேஸர் விங்கின் வீட்டுக்கு வந்தார்கள். அவனைத் தனியே கூட்டிச் சென்று தங்கள் மதத்தின் விரோதியான ஒருவனை அவன் காப்பாற்றிப் புகலளித்திருப்பது மதத்தையே அவமதிப்ப தாகும் என்று குறை கூறினர்கள். அவனை உடனடியாக வீட்டை விட்டு விரட்டிவிட வேண்டுமென்று நயத்திலும் பயத்திலும் கேட்டுக் கொண்டார்கள். ' விரட்டாவிட்டால் ?’’ என்று நிமிர்ந்து நின்று கேட்டான் கேலர் விங்,

  • உன்னை மதவிரோதியாகக் கருதுவோம் ' என்ருர் வந்திருந் தவர்களில் ஒருவர்.

சீக்கிய மதம் இம்மாதிரி ஒரு பிழையும் அறியாத பிற மதத்தவர் ஒருவனைத் தண்டிக்கும்படி போதிப்பதாக இருந்தால், நான் அந்த மதத்தின் விரோதியாக இருப்பதையே விரும்பு கிறேன்' என்று கூறி அவர்களை விரட்டியடித்துவிட்டான் அவன். இதன் பலன் மறுநாள் வெளியாயிற்று. கேலர் லிங்குக்கு அவ்வூரில் ஒரு கடை உண்டு. குரு நானக் எம்போரியம் என்நிற