பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wii கோணங்களிலிருந்து தங்கள் கதைகளை எழுதியிருக் கிரு.ர்கள். தீண்டாமை ஒழிப்பு, ஹரிஜன முன்னேற்றம், சாதி பேதம் பாராட்டாமை, இவை காந்திஜியின் சமுதாயக் கோட்பாடுகள். தமிழகத்தின் தலைசிறந்த சிறு கதை எழுத்தாளரான புதுமைப் பித்தன் தமது * புதிய நந்தன் என்ற கதையில், ராமநாதன் என்ற ஓர் உயர் சாதிப் பையனையும், கருப்பன் என்ற ஓர் ஹரிஜன முதியவனேயும், கிறிஸ்தவ சமயத்தில் சேர்ந் தும் சாதித் தொல்லே அகலாத அவன் மகனையும் ஒன்ருக ஒரு ரயிலில் அடிபட்டுச் சாக விடுகிரு.ர். காந்திஜியைச் சுமந்து வரும் ரயில் அது. அதில் அடி பட்டு மூவரும் சாகிரு.ர்கள். ' மூவரின் இரத்தங்கள் ஒன்ருய்க் கலந்தன, ஒன்ருய்த் தான் இருக்கின்றன. ' என்கிருர் புதுமைப் பித்தன். நம் நெஞ்சையே கலக்கும் சத்தியத்தின் சொல்லம்புகள் ! இதே தீண்டாமை பற்றித் தமது கோணத்திலி ருந்து ராஜாஜியும், இன்னும் வெவ்வேறு கோணங் களிலிருந்து து. ரா., ரஸவாதி, சரோஜா ராமமூர்த்தி போன்றவர்களும் சித்திரித்துள்ளார்கள். சாதிபேதம் எழுத்தாளர்களிடையே சத்திய ஆவேசத்தை எழுப்பி, இருப்பது நம் சிந்தனையைக் கிளறச் செய்கிறது. - அந்தக் காலத்துச் கீறை வாழ்க்கை, தியாக மனப் பான்மை இவற்றை நாம் உணர்ந்து கொள்ள வாய்ப் பாக இருப்பவை. சி. சு. செல்லப்பா, எம்.எஸ். கல்யாணசுந்தரம் ஆகியோரின் கதைகள். காந்திஜி இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக அரும் பாடு பட்டவர் மட்டுமில்லர்; அதே வேள்வித் தீயில் தம் இன்னுயிரையே ஈந்துவிட்ட மகான். இந்தச் சிறு கதைத் தொகுப்பில் இந்து முஸ்லிம் கலவரங்களின் பயங்கரமான பின் விளைவுகளைப் பற்றிய கதைகளும் இல்லாமல் இல்லை. கலவரங்களின் போது, தங்கள்