பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயாவி 63 அந்தக் கடை அவனுடைய பாட்டனர் காலத்திலிருந்து சுமார் அறுபது ஆண்டுகளாக நடந்து வந்தது. நூற்றைம்பது சிப்பந்தி கள் வேலை செய்து வந்த பெரிய கடை அது. அன்று காலையில் வழக்கம்போல் பத்து மணி சுமாருக்குக் கடைக்குச் சென்ருன் கேலர் ஸிங். ஆனல் சிப்பந்திகள் இன்னும் கடையைத் திறக்கா மல் வெளியே கூட்டமாக உட்கார்ந்திருந்ததைக் கண்டு அவன் திகைப்படைந்தான். அவர்களிடம் சென்று, ' என்ன நேர்ந்து விட்டது ? ஏன் எல்லோரும் வெளியே உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று அவன் பரபரப்போடு கேட்டான். அவர்கள் கூறிய காரணம் அவனைத் திடுக்கிட வைத்ததோடு மட்டுமல்ல ; கடுங் கோபத்துக்கும் உள்ளாக்கிற்று. மத எதிரி ஒருவனுக்கு ஊர்ப் பிரமுகர்கள் விருப்பத்துக்கு மாருக அவன் புகலளித்திருக்கிருளும்; அவனை வெளியே அடித்துத் துரத்தும் வரையில் அவர்கள் இந்தக் கடைக்குள்ளே சென்று வேலை செய்ய மாட்டார்களாம். கேஸ்ர் ஸிங் அவர்களுக்குப் பதிலேதும் கூறவில்லை. கடைச் சாவிகளை வாங்கிக் கடையைத் திறந்தான். உள்ளே சென்று பணப்பெட்டியை எடுத்து வந்து சிப்பந்திகள் அனைவருக்கும் சேர வேண்டிய சம்பளப் பாக்கியை எண்ணிக் கொடுத்தான். " மத விரோதி ஒருவனுக்கு இடமளித்துள்ள நானும் ஒரு மத விரோதிதான் ; ஆகையால், நீங்கள் இனி என்னிடம் வேலை செய்யக் கூடாது ; போய் வாருங்கள்' என்று கூறிவிட்டுக் கடையை இழுத்துப் பூட்டிக் கொண்டு வீட்டுக்குச் சென்ருன். அவன் உடனே டில்லியில் வியாபாரத் தொடர்புடைய ஒருவருக்கு டெலிபோன் செய்து அங்கிருந்து தன் கடைக்குத் தேவையான சிப்பந்திகளை முஸ்லீம்களாகவே தேர்ந்தெடுத்து, குடும்பத்துடன் அனுப்ப ஏற்பாடு செய்தான். தங்கள் இனத்தவர் ஏதேனும் கலகம் செய்வார்களோ என அஞ்சிய அவன் முன்னெச்சரிக்கை யாக போலீஸ் பந்தோபஸ்த்துக்கு ஏற்பாடு செய்துவிட்டான். ஆம், இந்த முன்னெச்சரிக்கையை எடுத்திராவிட்டால், அவனு டைய இந்தத் துணிகரச் செயல் அமிர்தசரஸ்ஸில் ஒரு பெரிய வகுப்புவாதக் கலகத்தையே ஏற்படுத்தியிருக்கும். ஆளுல் இப் பொழுது சட்டத்தின் முன் வாலாட்ட முடியாமல் மத வெறி யர்கள் அடங்கிப் போய்விட்டார்கள். சில நாட்களில் எல்லாம் சரியாகப் போய்விட்டது. கேஸர் ஸிங் இப்பொழுது தன்னல் காப்பாற்றப்பட்ட அமீர்கானுக்கு வியாபாரத்தில் பயிற்சியளித்து எம்போரியத்தின் மானேஜராகவும், தன் அந்தரங்கச் செயல்ான் ளுகவும் ஆக்கிக் கொண்டான். 3 இது நடந்த மறு ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அந்தச் சுதந்திரம் நாட்டை இரு கூறுகளாக வெட்டிவிட்டதால்,