பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அஞ்சலி வெட்டுண்ட இடத்திலிருந்து கொட்டும் ரத்தம் போல் இந்தியா விலும், பாகிஸ்தானிலும் ரத்தக் களறியான அமளிகள் தோன் றின. அப்பொழுது இரு தரப்பிலும் நடந்த அட்டுழியங்களே யும், அராஜகச் செயல்களையும் யார்தான் அறிய மாட்டார்கள்? அமிர்தசரஸ்ஸிலும் அதன் எதிரொலி ஏற்படாமல் போகவில்லை. ஆனல் இதை எதிர்பார்த்த கேலர் ஸிங், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கலகம் தொடங்கியதுமே தன் கடையை மூடிவிட்டு, அமீர்கானையும், இதர சிப்பந்திகளையும் டில்லிக்கு அனுப்பிவிட் டான். கிட்டத்தட்ட ஆறு மாத காலத்துக்கு அவன் அவர் களுக்கு வேலையின்றியே சம்பளம் கொடுத்துக் காப்பாற்றி வந் தான். அமளியெல்லாம் அடங்கி, அமிர்தசரஸ் அமைதியடைந்த பிறகே அவர்களை அங்கே திருப்பி அழைத்துக் கொண்டான். அமிர்தசரஸ்ஸாக்கு அவர்கள் வந்த அன்று மாலையில், கேலர் வலிங் அமீரைத் தன் காரில் ஏற்றிக்கொண்டு, நகரத்தின் ஒதுக்கமான பகுதி ஒன்றின் முன்பு அவனுடைய கடையின் கிடங் காக உபயோகிக்கப்பட்டு வந்த கட்டிடத்துக்கு அழைத்துச் சென்ருன். அங்கே ஏழெட்டு இளம் பெண்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அமீர் திடுக்கிட்டான். அவன் திடுக்கிட்டதற்குக் காரணம் இருந்தது. பிரிவினைக் கலவரங்களின் போது நடந்த அட்டூழியங்களில் ஒன்று, ஹிந்துக்கள் முஸ்லீம் பெண்களையும், முஸ்லீம்கள் ஹிந்துப் பெண்களையும் கடத்திச் சென்று, அவர்களை ஆடு-மாடுகளை ஏலம் போடுவதுபோல் காமுகர் களுக்கு விற்பனை செய்து வந்ததாகும். இப்பொழுது இங்கே அம்மாதிரிச் சில பெண்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டதும், தன் எஜமானரும் அந்தக் கொடுரமான பணியில் இறங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் அமீரின் மனசில் எழுந்து அவனே வாட்டி எடுத்தது. ஆனல் அந்தச் சந்தேகத்தைக் கேஸர் ஸிங் வளரவிடவில்லை. ' என்ன அமீர், திகைத்துப் போய் நின்று விட்டாய் ?' என்று சிரித்துக் கொண்டே வினவிய அவன் தொடர்ந்து விஷயத்தை விளக்கினன். இந்தப் பெண்கள் அனைவரும், கேஸர் ஸிங்கினல் தலா மூவாயிரம், நாலாயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வர்கள்தாம். ஆனால், மற்றவர்களைப்போல் தனது காமப் பசிக்கு உணவாக்கிக்கொள்ள அவன் இவர்களை ஏலத்தில் எடுக்கவில்லை. பெற்ருேர்-சுற்றத்தாரைப் பிரிந்து, கற்பை இழந்து நிற்கும் இந்த அபலைகள், கண்ட காமுகர்களால் விலைக்கு வாங்கப்பட்டு மேலும் சீரழிக்கப்படுவதைத் தடுக்கத் தானே அவர்களே விலை கொடுத்து வாங்கிக் காப்பாற்றி வந்தான். கொந்தளிப்பு முழுவ தும் அடங்கியதும் அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரித்து, உரியவர்களிடம் ஒப்படைத்துவிடவேண்