பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ipsruimsst 65 டும் என்பதே, கேஸர் ஸிங்கின் நோக்கம் மதவெறியர்கள் தன் இந்த நோக்கத்தையும் நிறைவேற விடாமல் செய்து விடு வார்களோ என்று அஞ்சியே அவன் இவர்களை இரகசியமான இடத்தில் வைத்து உணவும் உடையும் கொடுத்து இவ்வளவு நாட்களாகப் பாதுகாத்து வந்தான். கேலர் ஸிங் இந்த விவரங்களையெல்லாம் அமீருக்கு விளக்கி விட்டு, அமீர்! இப்பொழுது அமளியெல்லாம் ஒருவாறு அடங்கி விட்டது; பாவம், இந்தப் பெண்கள் எந்த இடத்தைச் சார்ந்த வர்களோ ? இவர்களைப் பார்த்தால் பெரும்பாலும் முஸ்லிம் பெண்களாகவே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆத லால், முஸ்லிமான உன்னிடமே இவர்களை ஒப்படைக்கிறேன். நீ இவர்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியே கூப்பிட்டுப் பேசி, இவர்களுடைய பெற்ருேர்-உற்ருேர் விலாசம் அறிந்து அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதற்காக எவ்வ ளவு பணம் தேவையானலும் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ள லாம். இந்த வேலை முடியும்வரை இதுதான் உன் ஆபீஸ் ; இது தான் உன் வீடு ' என்று கூறிவிட்டு வந்தான். கேலர் லிங்கின் உயர்வான மனிதத் தன்மையை நினைத்து நினைத்து வியந்தான் அமீர். எஜமானரின் கட்டளைப்படி அவன் அன்றுதொட்டு அந்தக் கிடங்கையே தன் இருப்பிடமாக்கிக் கொண்டான். மெல்ல மெல்ல ஒவ்வொரு பெண்ணுகச் சந்தித் துப்பேசி, அவர்கள் மனத்திலிருந்த கிலியைப் போக்கி, அவர் களுடைய ஊரும் சுற்றமும் அறிந்து அங்கே கூட்டிச்சென்று உரிய வர்களிடம் ஒப்படைத்தான். கடைசியில் இரண்டே இரண்டு பெண்கள்தான் பாக்கி. அவர்களில் ஒருத்தி ரோஷனரா என்ற முஸ்லிம் பெண். மற்ருெருத்தி குமுத் என்ற ஹிந்துப் பெண். இவர்கள் இருவரும் தங்கள் சொந்தக்காரர்கள் யார் என்ப தையோ, ஊர் எது என்பதையோ அறிவிக்க மறுத்துவிட்டனர். 'நாங்கள் கறைப்பட்டு விட்டோம். எங்கள் கறையைக் குடும்பத் தின் மீதும் தீட்டமாட்டோம். தயவு செய்து, எங்களை வெளியே விட்டுவிடுங்கள். எங்கேயாவது குளம், குட்டை பார்த்து விழுந்து எங்கள் மாசு படிந்த உடலை அழித்துக் கொள்ளுகிருேம்’ என்று அவர்கள் கூறினர். அமீர் எவ்வளவு கெஞ்சியும், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள இணங்காததால், அவன் கேஸர் ஸிங்கிடம் விஷயத்தைச் சொல்லி, நீங்களே வந்து அவர்களுடைய மனசை மாற்ற முடியுமா பாருங்கள்’ என்று கேட்டுக் கொண்டான். கேஸர் ஸிங் வந்தான். ஆனால், அவனிடமும் அப்பெண்கள் எந்த விவரத்தையும் அறிவிக்க மறுத்துவிட்டனர். 'நாங்கள் «Бт~~5