பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அஞ்சலி சாகத்தான் வேண்டும்; சாகத்தான் வேண்டும்; என்ற பல்லவி யையே திருப்பித் திருப்பிப் பாடினர். 'இதோ பாருங்கள், அம்மா, நீங்கள் மணமறிந்து பிழை செய்திருந்தால் சாவை நாடுவது சரிதான். ஆனல் சமூகமே தலை குப்புறப் புரண்டநிலையில் நீங்கள் மாசுபடுத்தப்பட்டிருக்கிறீர்கள். ஆகையால் இது உங்கள் பிழையாகாது. இருந்தாலும் உங்க களுக்கு மீண்டும் குடும்பத்தாருடன் கலக்கப் பிரியமில்லாவிட் டால், உங்களை மகிழ்வோடு மனைவியாக ஏற்றுக் குடும்பம் நடத் தக் கூடியவர்களைத் தேடி நான் மணம் செய்து கொடுக்கிறேன். இதற்காவது நீங்கள் இணங்கத்தான் வேண்டும் ' என்று கேஸர் ஸிங் அவர்களிடம் அன்போடு வேண்டிக்கொண்டான். கேலர் ஸிங்கின் வேண்டுகோளில் தொனித்த ஆத்மார்த்த மும் அன்பும், அந்தப் பெண்களின் உள்ளத்தைத் தொட்டிருக்க வேண்டும். ரோஷனரா என்ற பெண் கேட்டாள் : உலகறிய மானபங்கப்படுத்தப்பட்ட எங்களே, அடிமைகளாக நடுத் தெரு வில் விலை கூறப்பட்ட எங்களே. யார்தான் மனமுவந்து மணம் செய்து கொள்வார்கள், ஐயா? அப்படி யாரேனும் மணம் செய்து கொண்டாலும், பிற்காலத்தில் அவர்கள் எங்களின் மாசைச் சுட்டிக் காட்டிக் கொடுமைப்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதற்கு நான் உறுதியளிக்கிறேன், அம்மா. என்மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? நீங்கள் நன்ருக வாழ வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் விலைக்கு வாங்கி, உற்ருரிடம் ஒப்படைக்கத் தயாராயிருக்கும் நான், பிற்காலத்தில் உதறிவிடக் கூடியவர்களிடம் உங்களை ஒப்படைப்பேன? ' இதற்கு குமுத் பதிலளித்தாள் : “ உங்களை நாங்கள் நம்புகி ருேம், ஐயா, இதோ இருக்கிருரே, இவரையும் நம்புகிருேம். நாங்கள் இங்கே கிட்டத்தட்ட மூன்று மாத காலம் இருந்தோம். உங்கள் நண்பரிடம் ஒப்படைக்கப்பட்டும் ஒரு மாதம் வாழ்ந்து விட்டோம். நீங்கள் விரும்பியிருந்தால் இச்சமயத்தில் எங்களை என்ன வேண்டுமானலும் செய்திருக்க முடியும். ஆனல், நீங்கள் எங்களைச் சொந்தச் சகோதரிகளாக நடத்தி வந்திருக்கிறீர்கள். ஆகையால், உங்களை நாங்கள் பரிபூர்ணமாக நம்புகிருேம். ஆளுல், இந்த உலகில் இனி எங்களுக்கு வேறு எந்த ஆண்மகனிட மும் நம்பிக்கைக் கிடையாது. ’’ கேலர் ஸிங் சிறிது நேரம் அந்தப் பெண்களின் முகத்தைப் பார்த்துக்கொண்டே சிந்தனை செய்தான். பிறகு ஏதோ ஒரு